சாட்டையை சுழற்றும் விஜய்.. டாஸ்மாக் கடைகளுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக்.. அதிரடியாக பறந்த உத்தரவு!
சென்னை: தேர்தலில் வென்ற கையோடு 700+ மது கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே சென்னையில் இயங்கும் மது கடைகள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட நேரம் வரை மட்டுமே மது விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்காமல் இருப்பதை உறுதி செய்யச் சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை விஜய் எடுக்கத் தொடங்கியுள்ளார். மே 10ம் தேதி பதவியேற்ற கையோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகளை உருவாக்கக் கோப்பில் கையெழுத்திட்டவர், நேற்று காலை மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

டாஸ்மாக்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது விற்பனை பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. முழு மது விலக்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே விஜய் முதல்வரான உடனே டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், முதற்கட்டமாக 717 கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீஸ்
முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கைத் தற்காக்கவும், நேரக் கட்டுப்பாட்டை முறைப்படுத்தவும் சென்னை காவல் ஆணையர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ஒரு 'ஸ்ட்ரிக்ட்' அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி டாஸ்மாக் மற்றும் பார்களுக்கான நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டைமிங்
- FL1 கடைகள் எனப்படும் டாஸ்மாக் & எலைட் டாஸ்மாக் கடைகள் இரவு 10:00 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
- FL2 & FL3 கடைகள் (பார் & கிளப்/ஹோட்டல் பார்கள்): முறையே இரவு 10:00 மணி மற்றும் நள்ளிரவு 12:00 மணிக்குள் ஒட்டுமொத்தமாக மூடப்பட வேண்டும்.
மேலும், இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் சார்பில் சில முக்கியமான அறிவுறுத்தல்களும் தரப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
அதன்படி ரோந்து வாகனங்கள் (Patrol, Gipsy Patrol, Additional Patrol) மற்றும் பீட் அதிகாரிகள் (Sector Beat Officers) குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகள் மூடப்படுவதைக் கண்காணித்து, அதைப் போட்டோ எடுத்து அதிகாரப்பூர்வ போலீஸ் குரூப்பில் பதிவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். அதைத் தாண்டி வேறு எங்கும் விற்கக் கூடாது.
பார்களில் பாட்டில்களாக இல்லாமல், லூஸ் செல்லிங் முறையில் மது விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் மற்றும் அவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர்












Click it and Unblock the Notifications