ரூ76,000 மதிப்புள்ள செருப்பு, ஷூக்களை காணவில்லை... சென்னை போலீசில் தொழிலதிபர் தந்த விசித்திர புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக நகையை காணவில்லை, பொருளை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார்கள் வரும். ஆனால் சென்னையில் உள்ள ஒரு ஸ்டேசனுக்கு செருப்பை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.

வீட்டில் வைத்திருந்த 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு மற்றும் ஷூக்களை காணவில்லை என்று ஒரு தொழில் அதிபர் சென்னை செக்ரட்ரியேட் காலனி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

அப்துல் ஹாசிப் என்பவர் கீழ்பாக்கம் திவான் பகதூர் சண்முகம் சாலையில் வசித்து வருகிறார். இவரது வீடு இரண்டு மாடிகளை கொண்டது.

10 ஜோடி செருப்பு

10 ஜோடி செருப்பு

இவரது வீட்டின் வாயிலில் 10 ஜோடி செருப்பு மற்றும் ஷுக்கள் இருந்திருக்கிறது. சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்பு வரை இருந்திருக்கிறது. ஆனால் காலை 10 .30 மணிக்கு மேல் வீட்டின் வெளியே வந்து பார்த்த ஹாசிப் செருப்புகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

76 ஆயிரம் ரூபாய்

76 ஆயிரம் ரூபாய்

இதையடுத்து ஹாசிப் தலைமைச்செயலக காலனி போலீசில் தனது செருப்புகளை காணவில்லை என்று புகார் அளித்தார். அந்த செருப்புகளின் மதிப்பு 76 ஆயிரம் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

வேலைக்காரர்கள்

வேலைக்காரர்கள்

தனது செருப்பு மற்றும் ஷுக்களை தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பேச்சுலர் இளைஞர்கள் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்தார். அத்துடன் தனது வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்காரர்களும் செருப்புகளை திருடியிருக்கக்கூடும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிவி காட்சி ஆய்வு

சிசிடிவி காட்சி ஆய்வு

இந்த புகாரை பெற்றுக்கொண்ட தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பொதுவாக நகையை காணவில்லை, பணத்தை காணவில்லை, வாகனத்தை காணவில்லை என்று தான் போலீசுக்கு புகார்கள் வரும். முதல்முறையாக செருப்பை காணவில்லை என்று வந்த புகார் போலீசாரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+