வன்முறையை தூண்டும் ரீல்ஸ்! Instagram உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப தமிழக காவல்துறை முடிவு
சென்னை: வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ் தொடர்பாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம் அனுப்ப உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் மற்றும் பிற பதிவுகள் பதிவேற்றப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பதிவுகள் சமூக அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் கண்டெண்ட்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜாதி, மதம், இனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதோடு, சில சமயங்களில் நேரடியாக வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.
வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவை, தகவல்களை விரைவாகப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. இதனால், வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. இவை வன்முறை மற்றும் குற்றங்களை தூண்டும் ஆபத்தைக் கொண்டவையாக உள்ளதால், இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், "குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெருமைப்படுத்தும் வகையில் ரீல்ஸ்கள் வெளியாகின்றன. கத்தியை வைத்தும், சாதி ரீதியாகவும் ரீல்ஸ் பதிவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லையில் ஆணவக்கொலை சம்பவத்தில் சுர்ஜித்துக்கு ஆதரவாக ரீல்ஸ் பதிவிடுவது அதிர்ச்சியளிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடுகள் இல்லாததால் வன்முறையை தூண்டும் ரீல்ஸ்கள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால் குற்றங்களை தூண்டும் விதமான ரீல்ஸ்களை தடுக்க, கட்டுப்பாடுகள் கோரி விரைவில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications