ஒரு வழியாக திறக்கப்படும் பூந்தமல்லி- போரூர் மெட்ரோ! எங்கெல்லாம் ரயில் நிற்கும்! டிக்கெட் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லி டூ வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில் அந்த ரயில்கள் எந்தெந்த நிறுத்தங்களில் நிற்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் டூ பரங்கிமலை, விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை என இரு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

chennai metro

மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதை அடுத்து 2 ஆம் கட்டமாக ரூ 63 ஆயிரம் கோடி மதிப்பில் 118 கி.மீ. தொலைவில் மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை , மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4ஆவது வழித்தடத்தில் பூந்தமல்லி- வடபழனி இடையே கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. இங்கு சோதனை ஓட்டமும் நடந்துவிட்டது.

கடந்த மே மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ரயிலை இயக்க அனுமதி கொடுத்தார். அது முதல் இந்த ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகிக் கொண்டே இருந்தது.

வரும் அக்டோபர் 11-ஆம் தேதி இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் எங்கெங்கு நிற்கும் என்பது குறித்து பார்க்கலாம். மொத்தம் 14.64 கி.மீ தூரம் கொண்டது.

நிறுத்தங்கள்

பூந்தமல்லி பைபாஸ்
பூந்தமல்லி
முல்லைத்தோட்டம்
கரையான்சாவடி
குமணன்சாவடி
காட்டுப்பாக்கம்
ஐயப்பன்தாங்கல்
தெள்ளியகரம் (எஸ்ஆஎம்சி)
போரூர் பைபாஸ்
போரூர் சந்திப்பு

ஆகிய நிறுத்தங்கள் நின்றுச் செல்லும். வடபழனி- போரூர் இடையே சாலிகிராமம், ஆலப்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு பெறாததால் இங்கு ரயில்கள் நிற்காது.

இந்த வழித்தடங்களுக்கு ரூ 30 முதல் ரூ 40 வரை தூரத்திற்கேற்ப டிக்கெட் கட்டணம் இருக்கும் என சொல்லப்படுகிறது. காரிடார் 4-ல் மஞ்சள் லைனில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கியூஆர் கோட், சிங்கார சென்னை கார்டு, ஸ்மார்ட் கார்டு, யூபிஐ, உள்ளிட்டவை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம். இந்த ரயில் பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், ராமசந்திரா மருத்துவமனை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இணைப்பதால் அப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+