படிக்கட்டில் தொங்கியதை கண்டித்த நடத்துநரை வெறித்தனமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்.. சென்னையில் கொடுமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை பள்ளி மாணவர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Porur Shock School Students Brutally Assault Bus Conductor

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தடுக்க போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து வடபழனி நோக்கி 26 ஆம் எண் அரசு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. போரூர் அருகே சென்றபோது, பள்ளிக்குச் செல்வதற்காக சில மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பேருந்தில் இருந்த நடத்துநர், படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என மாணவர்களை எச்சரித்துள்ளார். பேருந்தின் கதவு மூடக்கூடிய வகையில் இருப்பதால், படிக்கட்டில் நின்றால் கதவு சரியாக மூட முடியாது என்றும், ஆபத்தான முறையில் பயணம் செய்யக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அங்கிருந்த சில மாணவர்கள் நடத்துநரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். சக பயணிகள் மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். தடுத்தவர்களையும் மீறி மாணவர்கள் நடத்துநரைத் தொடர்ந்து தாக்கினர்.

இதையடுத்து சம்பவம் குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போரூர் சிக்னல் அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அங்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் கடுமையாகத் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பாக உள்ளே ஏறச் சொன்ன நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+