சென்னையில் இன்று ‛பவர்கட்’.. 10 மேஜர் ஏரியாக்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், கேகே நகர், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, அடையார் உள்பட 10 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 25.07.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கேகே நகர், ஐடிசி, பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, அடையார், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

chennai eb power cut

தாம்பரம்: வண்டலூர், பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கரன் தெர, பாரதி தெரு, பாலாஜி தெரு, ஸ்ரீநிவாசா நகர், சூராத்தம்மன் கோவில் தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி தெரு, மணி தெரு, மணிமேகலை தெரு, கலைவாணி தெரு, மணிகண்டன் தெரு, உமா நகர், மேற்கு தாம்பரம், முல்லை நகர், புதுதாங்கள், அம்பேத்கார் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலின, காமராஜ் தெரு, காந்தி ரோடு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

அதேபோல் கடப்பேரி, மவுலானா நகர், அற்புதம் நகர், நாகரத்தினம் நகர், ராம்திலகம் நகர், அம்மன் கோவில் தெரு, ஜெருசலேம் நகர், பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பள்ளி தெரு, நடு தெரு, கிழக்கு தெரு, டிஎம் ரோடு, புலிக்குறடு, ராஜாஜி நகர், மாடம்பாக்கம், பிரதான சாலை, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மெண்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவுனேஸ்வரி நகர், கணேந்தா நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கேகே நகர்: வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், லட்சுமி நகர் அனைத்து தெருக்களும், ராதா அவென்யு அனைத்து தெருக்களும், ஏகேஆர் நகர், ராதா நகர், மேலன் நகர் 5வது தெரு முதல் 9 வது தெரு வரை, வடபழனி, கன்னகிபுரம் 1வது, 2வது 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது குறுக்கு தெரு முதல் 5வது குறுக்கு தெரு வரை, மீரான் ஷாஹிப் தெரு, குமரன் காலனி மெயின் ரோடு, சாலிகிராமம், ராணி அண்ணா நகர், 80 அடி சாலையின் ஒரு பகுதி, பிடி ராஜன் சாலை பகுதி, கேகே நகர் 14வது 15வது செக்டார், கேகே நகர் 94வது தெரு முதல் 104 வது தெரு வரை, எஸ்எஸ்பி நகர், எஸ்வி லிங்கம் சாலை, அழகர் பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் பகுதி முழுவதும் இன்று மின்சப்ளை இருக்காது.

ஐடிசி: ரிங் ரோடு, 200 அடி ரேடியல் ரோடு, துரைபாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, எல்லையம்மன் கோவில் தெரு, போஸ்ட் ஆபிஸ், எம்சிஎன் நகர், ஒஎம்ஆர், பிடிசி காலனி, ஒஎம்ஆர் ரோடு, ஸ்ரீவித்யா அவென்யு, நேரு நகர், முட்டைகாரன் சாவடி, சாய்பாபா நகர், சுப்பிரமணியன் தெரு, பம்மன் பாபா நகர், பகவத் சிங் தெரு, விஓசி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

பூந்தமல்லி - போரூர்: பூந்தமல்லியை பொறுத்தவரை பூந்தமல்லி நகராட்சி, சென்னீர் குப்பம் பகுதி முழுவதும், கரையான்சாவடி பகுதி முழுவதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி பகுதிகளிலும், போரூரை எடுத்து கொண்டால் குன்றத்தூர், பாபு கார்டன், திருசெந்தூர்புரம், கொள்ளசேரி, பஜார் தெரு, நான்கு ரோடு, குன்றத்தூர் பகுதிகளிலும் அதேபோல் அம்பத்தூர் பகுதியிலும் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

அம்பத்தூர்: அதேபோல் அம்பத்தூர் பகுதிகளில் சின்ன காலனி, பெரிய காலனி, பிகேஎம் ரோடு, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வர ராவ் 4வது குறுக்கு தெரு, அயப்பாக்கம், அயணம்பாக்கம், நியூ சென்ட்சுரி நகர், ராம்பூரணம் நகர், விஜயா நகர், படவட்டமன் கோவில் தெரு, எடன் அவென்யு, மேல் அயணம்பாக்கம் ரேடு, ராயல் கிளப் ரோடு, சீனிவாசபிள்ளை ரோடு, பச்சையப்பன் நகர், கொன்ராஜ் குப்பம், கோலடி ரோடு, சரஸ்வதி நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

அடையார்: இந்திரா நகர், அக்கரை, பிரெஸ்டீஸ் சில்வர் ஸ்பிரிங் வில்லாஸ், ஸ்பார்க்கிளிங் சாண்ட் அவென்யூ, எம்ஜிஆர் நகர், ஸ்பிரிங் கார்டன் 1 மற்றும் 2வது தெரு, அல்லிகுளம், ஈசிஆர் ஒன் பகுதி, கடல் பாறை, சன்ரைஸ் அவென்யூ, கலைஞர் கருணாநிதி சாலை, காப்பர் பீச் ரோடு, பனை ெஷல் அவென்யூ, என்ஆர்ஐ லே-அவுட், எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் 7 முதல் 14வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், 10வது குறுக்கு தெரு சாஸ்திரி நகர் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் 3வது மற்றும் 4வது லேன், காலசேத்ரா, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 4வது கிழக்கு தெரு பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

மேலும் வால்மீகி தெரு, சிவசுந்திரா அவென்யூ 1 முதல் 2வது தெரு, கலாசேத்ரா சாலை, உள்ளூர், விஜியா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, சக்தி பொன்னும்மாள் தெரு, எம்ஜிஆர் 7 முதல் 13வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 3வது பிரதான சாலை, ராஜ்பவன், டிஏ காந்தி சாலை, கோகிலம் தெர, புதிய காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், நாதன் சுப்பிரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தல் அவென்யூ, முத்துக்கிருஷ்ணன் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

தண்டையார்பேட்டை: அத்திப்பட்டு, புதுநகர், செப்பாக்கம், மெளத்தமேடு, கேஆர் பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பாள்ளி இண்டஸ்டிரில், தமிழ் குறஞ்சியூர் நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

சோழிங்கநல்லூர்: பாபு நகர், சித்தாலப்பாக்கம், பஞ்சாயத் போர்டு மேடவாக்கம், அம்பேத்கார் நகர், அண்ணாசாலை, திருவள்ளூவர் நகர் பகுதி, அண்ணா சாலை நெசவாளர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் ரோடு, ஜெயசந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், டிஎன்எஸ்சிபி நியூ பிளாக் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரவாயல்: வானாகரம், செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகரின் ஒரு பகுதி, சிவபுதம் மேடு, எஸ்வி பள்ளி, விவிடி சோமா, பழைய மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+