எலே பேதில போவ.. அச்சு அசலா சேனல்களின் டூப்ளிகேட் அக்கவுண்ட்.. தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் விபரீதம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தினர் சிலர் சமூக வலைதளங்களில் பிரபல ஊடகங்களின் பெயர், லோகோ போலவே போலியாக கணக்கை உருவாக்கி அவதூறாக செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாக பதிவிட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிப்பதாக, பதிவுகள் நீக்கப்படுவதுடன், இந்த அறுவெறுக்கத்தக்க நடவடிக்கையை உடனே நிறுத்தாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிப்பதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இது தொடர்பாக தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஐடிவிங்கை சேர்ந்த சிலர் தமிழகத்தின் பிரபலமான ஊடகங்கள், செய்தி சேனல்களிம் பெயர் மற்றும் லோகோவில் சிறிது மாற்றங்களை செய்து போலியாக சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி அதில் அவதூறான புகைப்படங்களையும் செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.

போலி மீடியா கணக்குகள்
பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக செய்தி சேனல்களின் லோகோ போல இருப்பதால் அவற்றை பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர். தமிழகத்தின் பிரபலமான அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூட அந்த செய்தியை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தான் அவை போலியான சமூக வலைதள கணக்குகள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ஊடகங்களின் பெயர்களை போலியான சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்கிய தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்," தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பல முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளின் பெயர்களிலும், மேலும் பல கற்பனையான ஊடக நிறுவனங்களின் பெயர்களிலும் பக்கங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பல முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் நாகூசும் வகையிலான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
சமூக வலைதள அவதூறு
அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் திட்டமிட்டு பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கட்சி வேறுபாடின்றி இதுபோல் போலியான பக்கங்களை உருவாக்கி ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த பலர், திட்டமிட்டு பல ஊடகங்களின் பெயரிலேயே போலியான பக்கங்களை உருவாக்கி, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக இதுபோல் கீழ்த்தரமான தாக்குதலை நடத்துவது தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான நடவடிக்கையாகும்.
ஊடகவியலாளர்கள்
ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள இந்த இணையவழித்தாக்குதல், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளிப்படையாக மிரட்டுவதற்குச் சமமாகும். இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறலுமாகும். மேலும், உண்மைக்குப்புறம்பான இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
தமிழக வெற்றிக் கழகம்
ஆகவே, இந்த கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டும் வகையிலும், திட்டமிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற குற்ற நோக்கத்துடனும் செயல்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது அக்கட்சியின் தலைவர் திரு.விஜய் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.
-
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி












Click it and Unblock the Notifications