திடீர்னு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் தந்துடுவாராம் இந்த சார்.. யார்னு பாருங்க.. திணறிய திருமங்கலம்
சென்னை: வினோதமான சபலிஸ்ட் ஒருவர் போலீசில் சிக்கி உள்ள நிலையில், அவரை பற்றி மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் அந்த சைக்கோ சரவணன்?
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண், திருமங்கலம் மகளிர் போலீசில், பாலியல் புகார் ஒன்றை அளித்தார்..
இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. அப்போதுதான், முகப்பேர் மேற்கு பகுதியை சரவணன் என்பவர் சிக்கினார்.. 31 வயதான சரவணனிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது பல்வேறு தகவல்களை போலீசில் வாக்குமூலமாக அவர் தந்துள்ளார்.

வாக்குமூலம்:
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "2021ம் ஆண்டு திருமங்கலம் பகுதியில், தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு, பைக்கில் தப்பி சென்றார். இந்த வழக்கில், போக்சோவில் அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம்தான், ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.. ஆனால், மறுபடியும் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பாலியல் கேஸ்கள் உள்ளன.. எந்த பெண் ரோட்டில் தனியாக சென்றாலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விடுவார்.. அதிலும் அழகான பெண்கள் + மார்டன் டிரஸ் அணிந்த பெண்கள் என்றால், விரட்டி விரட்டி பாலியல் தொல்லை தருவார்..
துப்பட்டா:
அதிலும், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்கள் என்றால், விடவே மாட்டார்.. குறிப்பாக, துப்பட்டா அணியாத பெண்கள் என்றால், கூடுதலாக குறி வைத்து, பின்னாடியே சென்று டார்ச்சர் தருவார். ஒருநாளைக்கு தினமும் 5 பெண்களிடமாவது சில்மிஷத்தில் ஈடுபடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.. இப்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்" என்றனர்.
வாடகை பைக்:
இந்நிலையில், கைதாகி உள்ள சரவணன் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. முகப்பேறு பகுதியில்தான் வசித்து வருகிறார் சரவணன். இவருக்கென்று எந்த நிரந்தர வேலையும் கிடையாது.. அந்த பகுதியில் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து, பணம் சம்பாதித்து வந்தார்..
இந்த பணத்தில், பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொள்வார்.. திருமங்கலம், முகப்பேர், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் உட்பட பல பகுதிகளில் ரவுண்டு அடித்து கொண்டே வருவார்.. இந்த பகுதிகளில் இருக்கும் பூங்கா பகுதிகளில் விளையாடும் பெண் குழந்தைகளை சீண்டுவார். பிறகு, சாலைகளில் செல்லும் சிறுமிகள், இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொள்வார்.. தினமும் இதை ஒரு வாடிக்கையாகவே கடைப்பிடித்து வந்திருக்கிறார்..
கட்டிப்பிடித்து முத்தம்:
அதாவது பெண்களிடம் சென்று அட்ரஸ் கேட்பது போல கிட்ட செல்வாராம்.. பிறகுதான், திடீரென அந்தபெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவாராம். இதனால், சம்பந்தப்பட்ட ஏரியாக்களில் இருந்து போலீசுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன.. தற்போது இது தொடர்பான விசாரணையை நடத்திய பிறகுதான், இவ்வளவு பாலியல் சீண்டல்களையும் செய்தது, சரவணன்தான் என்பதை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள்..
சிக்கிய அடையாளம் :
சிசிடிவியில் சரவணனை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்களே, தவிர, சரவணன் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால், ஜெ.ஜெ. நகர் போலீசார், இதற்காகவே, தனிப்படை அமைத்து, சரவணனை தேடி வந்தனர். அப்போதுதான், முகப்பேரில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு சென்று சுற்றிவளைத்து சைக்கோ சரவணைனை கைது செய்தனர்.
ஆனால், அப்போது அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். அவரை போலீசார் பின்னாடியே துரத்தி சென்றுள்ளனர்.. சாலையோரம் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், "கை முறிவு" ஏற்பட்டுவிட்டது.. அதனால், முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சரவணன் அனுமதிக்கப்பட்டார்... அங்கு சிகிச்சை முடிந்ததும், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தப்பட்டு புழல் ஜெயிலில் இந்த விநோத சபலிஸ்ட் அடைக்கப்பட்டுள்ளார். சைக்கோ சரவணனின் இந்த செயலால், அந்த பகுதி பெண்கள் பீதியில் இருக்கிறார்களாம்..!!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications