Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திருவல்லிக்கேணி மார்க்கெட்டில் இருந்த எமன்.. உயிரை பறித்த ரேபிஸ்! இதுக்கு என்டே கிடையாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் துரத்தி துரத்தி கடித்தது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த நாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

உலகம் முழுவதும் ரேபிஸ் நாய் கடியால் அதிக மக்கள் உயிரிழக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்திலும், இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாகவும் இருக்கிறது. வெறிநாய்க்கடி உயிரிழப்புகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் என்கிற போர்வையில் சிலர் முட்டுக்கட்டை போடுவதால், உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்றும் ஒரு உயிர் பலி பதிவாகியிருக்கிறது.

rabies dog

திருவல்லிக்கேணி மார்க்கெட்

அதாவது சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நஸ்ரூதின். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் திருவல்லிக்கேணி மார்கெட்டுக்கு இவர் சென்றிருந்த போது அங்கிருந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் ஒன்று இவரை கடித்திருக்கிறது. இதனையடுத்து அவர் ரேபிஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார். ஆனால், உடல் நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணம் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரேபிஸ் என்றால் என்ன?

ஏன் ரேபிஸ் நோய் இவ்வளவு ஆபத்தானது? அதை எப்படி தடுப்பது? என்கிற விஷயத்தை புரிந்துக்கொண்டால்தான் இந்த பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். ரேபிஸ் என்பது உயிர் கொல்லி வைரஸ். இது மனித உடலுக்குள் நுழையும்போது நரம்புகள் மூலமாக பயணித்து நேரடியாக மூளைக்கு செல்கிறது. அங்கு பலுகி பெருகி முளையை முடக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. நாய் மட்டுமல்ல, குரங்கு, பூனை, வவ்வால், நரி போன்றவற்றின் மூலம் கூட ரேபிஸ் பரவலாம்.

எப்படி பரவுகிறது?

ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட பாலூட்டிகள் கடிக்கும்போதும், அல்லது அதன் உமிழ்நீர் திறந்த காயம், கீறல், கண்கள் அல்லது வாய் போன்ற பகுதிகளில் படும்போதோ இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. வெறிநாய் கடிக்கிறது எனில், அது கடித்த இடம் மிகவும் முக்கியம். கால்களில், கைகளில் கடித்திருந்தால் வைரஸ் மூளைக்கு போக சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் முகம், கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடித்திருந்தால் உடனடியாக வைரஸ் மூளைக்கு போய்விடும்.

உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது?

வைரஸ் உடலுக்குள் நுழைந்த உடனேயே அறிகுறி தெரியாது. அறிகுறிகள் தெரிய சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, சோர்வு இருக்கும். நோய் முற்றிய நிலையில் கடிபட்ட இடத்தில் வலி மற்றும் கூச்ச உணர்வு, தண்ணீரைக் கண்டால் பயப்படுதல், அதிக கோபம், பயம் மற்றும் மனக்குழப்பம், அதிகப்படியான உமிழ்நீர் சுரத்தல், சுவாசத் தசைப்பிடிப்பு, திடீர் வலிப்பு ஆகியவை ஏற்படும். நோய் முற்றி நிலையில் தென்படும் அறிகுறிகள் மரணத்திற்கானது. இந்த அறிகுறிகள் ஒருமுறை தெரிந்துவிட்டால் மரணம் நிச்சயம்.

தமிழ்நாட்டின் நிலைமை

கடந்த ஆக.15ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ரேபிஸ் பாதிப்பால் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆண்டு மட்டும் சுமார் 3.67 லட்சம் பேர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு பாதிப்பு 4.80 லட்சமாகவும், உயிரிழப்பு 40 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+