சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? இன்று முதல் நேரம் மாறுகிறது! உடனே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் - புறநகர் பகுதிகள் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களின் நேரத்தை சென்னை ரயில்வே கோட்டம் இன்று முதல் மாற்றி அமைத்து இருக்கிறது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு நகரங்களுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், பெண்கள், முதியோர்கள் என லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகிறார்கள். சென்னையின் பிரதான போக்குவரத்தாக பார்க்கப்படும் இந்த மின்சார ரயில் சேவையின் நேரம் தற்போது மாற்றப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "சென்னை கடற்கரை ரயில் நிலையம் - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் 13 மின்சார ரயில்களின் நேரம் திங்கள்கிழமை (நவ.27) முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள் மாலை 4.40 மணிக்கு பதிலாக 4.50 மணிக்கும், இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 ம்ணிக்கும் இயக்கப்படும்.
கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் நோக்கி இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.45 மணிக்கும், இரவு 10 மணிக்கு பதிலாக 10.05 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக 4.55 மணிக்கும், மாலை 5.45 மணிக்கு பதிலாக 6 மணிக்கும், மாலை 6.10 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கும், இரவு 8.05 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கும் இயக்கப்படும்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு காலை 6.10 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாலை 5.50 மணிக்கு பதிலாக 6 மணிக்கும் இயக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications