நேற்று கொட்டி தீர்த்த கனமழை.. இன்றிரவு சென்னையில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று இரவு மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், கனமழை பெய்யவே வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடற்கரை பகுதியில் புயல் சுழற்சி வலுவிழந்ததால், வடசென்னை கடற்கரை பகுதியில் மேக உருவாக்கம் கணிசமாக குறைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை மிக தீவிர கனமழை பெய்தது. வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக் காடானது. அதேபோல் கனமழையால் மிகப்பெரிய அளவில் இடி இடித்து, மின்னல் வெட்டியதால் பல்வேறு பகுதிகலிலும் மின்சாரம் தடைபட்டது.

Chennai Rain

அதேபோல் வடசென்னையில் கீழ் பாலங்கள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காலைக்குள் அந்த மழைநீர் வடிந்தது. இருப்பினும் சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இன்று காலை முதலே ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலில் புயல் சுழற்சி வலுவிழந்ததால் மேகங்கள் உருவாக்கம் குறைந்தது.

இதனால் வடக்கு சென்னை கடற்கரை பகுதியில் மேக உருவாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. மேலும் ஆரஞ்சு அலர்ட்டும், மஞ்சள் அலர்ட்டக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெளியில் செல்லும் போது குடை மற்றும் ரெயின் கோட் உடன் எடுத்து செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+