சென்னை மழை.. ஒரே இரவில் 36 செ.மீ. கொட்டியதே எப்படி? நீலகிரியிலும் அடிச்சு ஊத்துதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மழை என்றாலே இந்த முறை கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.. நேற்று நள்ளிரவு கடந்தும் விடாமல் கொட்டிய மழையால் வடசென்னை பகுதிகள் திணறின. அதிலும் பாரிமுனையில் ஒரே இரவில் 36 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாநகரின் மற்ற பகுதிகளிலும் 11.5 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது. சென்னையில் இப்படி மழை கொட்டும் நிலையில், நீலகிரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை, நள்ளிரவு தாண்டியும் நிற்கவில்லை. குறிப்பாக வடசென்னையில் மழை வெளுத்து வாங்கியது. பாரிமுனையில் மட்டும் 36 செ.மீ. மழை பதிவான நிலையில், மாநகரின் மற்ற பகுதிகளிலும் கணிசமான மழை பெய்துள்ளது.

ooty

சென்னை மழை

இவ்வளவு மழை பெய்ததும், இது மேக வெடிப்பாக இருக்குமோ என்ற கேள்வி எழலாம். ஆனால், இது மேக வெடிப்பு கிடையாது.. கனமழைதான் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மருத்துவ முகாம்கள், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் எல் நினோ தாக்கம் காரணமாக குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், மழையை எதிர்கொள்ள அரசு இயந்திரமும் தயாராக இருக்கிறது.

நீலகிரியிலும் மழை வெளுத்து வாங்குதே

சென்னையில் மழை ஒரு பக்கம் என்றால், நீலகிரியிலும் கடந்த ஒரு வாரமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அவலாஞ்சி என பல மலைப் பகுதிகளிலும் மழையும் சாரல் மழையும் பெய்து கொண்டிருக்கிறது.

நீலகிரியில் மழை பெய்வது புதிதல்ல. வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.. இந்த மழையை நம்பித்தான் விவசாயமும், தண்ணீர் தேவையும் இருக்கிறது. ஆனால், இந்த வருடம் எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறைந்து, பல இடங்களில் வறட்சி நிலவியது...

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 50 சதவீதம் அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால், நீலகிரியின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.

அடிக்கடி கரண்ட் கட்

நீலகிரியில் இப்போது மழை மட்டுமல்ல, குளிரும் மக்களை வாட்டத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் இதமான குளிர் இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதிகாலையில் கனமழை இல்லாமல், தூறல் போட்டாலும், குளிர் விடுவதாக இல்லை.. மழையுடன் மேகமூட்டமும் சேர்ந்து கொள்வதால் வெளியே செல்வதற்கே சில நேரங்களில் சிரமமாக இருக்கிறது.

இதனிடையே. சில பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழை, குளிர், கரண்ட் கட் என ஒரே நேரத்தில் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..

கனமழை என்றாலே நீலகிரியில் ஆங்காங்கே மரங்கள் விழக்கூடும். நேற்று முன்தினம்கூட, குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரிய குறும்பாடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம், மின்கம்பம் மீது விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் சென்று போராடி மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். மழை பெய்தாலும், சென்னையைப் போல சாலைகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்வது, சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது போன்ற சிரமங்கள் வழக்கம்போலவே உள்ளன..

விவசாயிகளுக்கு ஹேப்பி

2 நாட்களுக்கு முன்பு முத்தோரை, பாலாடா, கல்லக்கொரை, அப்புக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மதிய நேரத்தில் திடீரென பெய்யத் தொடங்கிய சாரல் மழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் மழையை வரவேற்றனர்.

ஆனால், சுற்றுலாப் பயணிகள்தான் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள்.. தற்போது ஆயுத பூஜை, வார விடுமுறையும் சேர்ந்து வந்துள்ளது.. ஆனால், மழையும் மேகமூட்டமும் சேர்ந்து கொள்வதால், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் சில சுற்றுலாத் தலங்களை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. இயற்கையை என்ஜாய் செய்ய வந்தவர்களுக்கு, மேகமூட்டம் காரணமாக ஏமாற்றமும் ஏற்படுகிறது.

இனிவரும் நாட்களிலும் மிதமான மழை பெய்யும் என்று நீலகிரி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. மழை விவசாயத்துக்கு கை கொடுத்தாலும், அடிக்கடி மின்தடை, அதிகரிக்கும் குளிர், போக்குவரத்து சிரமம் என அன்றாட வாழ்க்கையில் சில தொந்தரவுகளும் மலை மாவட்ட மக்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+