Chennai Rain: ஊட்டியாக மாறிய சென்னை! ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்க்கும் கனமழை!
சென்னை: தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்து வருகிறது. இரவு 10.40 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வருகிறது.
புறநகர் சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு 10.50 மணிக்கு தொடங்கிய மழை 11.20 வரை பெய்திருக்கிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

முன்னதான சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தொடங்கி செப்.1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்.2-5 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3" செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (31-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications