#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னையில் மழை விழுந்ததை சென்னை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 6 மாதமாக வாராத மழை வந்து சென்ற அதிசயத்தை எண்ணி சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து வருகிறார்கள் சென்னை மக்கள். ஆம் சென்னை மக்கள் ஒரு தேவதையைப் போல் மழையை இன்று வரவேற்றார்கள். அதனை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு டாப் டிரெண்டிங் ஆகி சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வானத்தில் இருந்த வந்த மழை தேவதையை ஒவ்வொரு வீட்டிலும் சேர்த்து வைக்காமல் சாக்கடையாக துரத்தியதால் கோபத்துக் கண்டு வராமல் போனாள் மழை தேவதை. இதன் விளைவாக 6 மாதங்களாக சென்னையில் மழையே இல்லை.

chennai rains is top treanding on twitter after 6 month back rain come chennai

இது ஒருபுறம் எனில் நிலத்துக்கு அடியில் இருந்த மழை நீரை மொத்தமாக உறிஞ்சியதால் ஒவ்வொரு வீட்டு போரிலும் காற்றுதான் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை காணவில்லை.

மெட்ரோ தண்ணீரை முழுமையாக நம்பி இருக்கிறார்கள் மக்கள். காசு கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் தண்ணீர் தான் கிடைக்கவில்லை. இதனால் சென்னை மக்கள் மழையே எப்போது வருவாய் என கடந்த 6 மாதமாகவே தேடி வந்தார்கள். மக்களின் கோரிக்கையை ஏற்று சற்று மனம் இறங்கிய மழை தேவதை புறநகர் பகுதி வழியாக இன்று சென்னை வந்தது.

வெயிலை குறைத்துக்கொண்டு மெல்லிய காற்றோடு வந்த மழை பார்த்து சென்னைவாசிகள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். ஒவ்வொருவரும் வீடியோ எடுத்து தங்கள் டுவிட்டர் பக்கததில் வெளியிட்டார்கள். இதனால் சென்னையில் மழை வந்தது டுவிட்டரில் டாப் டிரண்டிங்காக மாறியது. மழை வந்ததை சென்னை மக்கள் வீடுகளில் மட்டுமல்ல டுவிடடரிலும் கொண்டாடிவருகிறார்கள்.

சென்னைவாசிகள் மழை ரசித்து எடுத்த ஒவ்வொரு வீடியோவும் நிச்சயம் அவர்கள் மழையின் அருமையையும், மழைநீரின் சேமிப்பின்அருமையை உணர்ந்து இருப்பார்கள் என்பது தெரிகிறது. ஆம் தண்ணீர் என்பது பூமியில் இருந்து பெரும் பொருள் அல்ல. வானத்தில் இருந்து கிடைக்கும் பொருள் என்பதை சென்னை மக்கள் இன்று உணர்ந்து இருப்பார்கள். அவர்களின் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+