சபாஷ் தமிழ்நாடு! நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்! சென்னைக்கு 2வது இடம், கோவைக்கு 10வது இடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே வேலை செய்யும் பெண்களுக்கு சிறந்த நகரங்கள் எவை என்பது குறித்த லிஸ்டை அவதார் என்ற அமைப்பை வெளியிடும். அதன்படி இந்தாண்டு நாட்டின் பெண்களுக்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் நம்ம சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது விற்கும் விலைவாசியில் ஆண் பெண் என இரு தரப்பும் வேலைக்குச் சென்றால் மட்டுமே செலவுகளைச் சமாளிக்க முடியும் என்ற சூழல் இருக்கிறது.

coimbatore

இதனால் பெண்கள் வேலைக்குச் செல்வது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எந்த நகரம் பாதுகாப்பானது என்பதைக் கண்டறிய அவதார் என்ற அமைப்பு ஆய்வை நடத்தியது.

சிறந்த நகரங்கள்:

இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான ஆய்வை நடத்தும். நாடு முழுக்க உள்ள 120 நகரங்களில் வசிக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களிடம் கருத்துகளைக் கேட்டு இந்த விரிவான ரிப்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் பெண்களுக்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெங்களூர், சென்னை:

ஒவ்வொரு நகரிலும் சுமார் 1500 பெண்களிடம் கருத்துகளைக் கேட்டு இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2024ம் ஆண்டில் சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரும், இரண்டாவது இடத்தை சென்னையும் பிடித்துள்ளது.

இது தொடர்பாக அவதார் குழுமத்தின் நிறுவனர் சௌந்தர்யா ராஜேஷ் கூறுகையில், "இது ஏதோ ஒரு கேள்வித்தாளை அனுப்பி, நிரப்பித் தரச் சொல்லி, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட லிஸ்ட் இல்லை.. ஒவ்வொரு பெண்ணிடமும் நாங்கள் நேரடியாகப் பேசி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து உருவாக்கிய லிஸ்ட் இது" என்றார்.

எப்படிக் கணக்கிடப்படுகிறது:

இந்த பட்டியல் Social Inclusion Score மற்றும் Industry Inclusion Score ஆகிய இரண்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இதில் திறமை & வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்குத் தேவையான ஆதரவை அளிப்பது (caregiving support) ஆகிய இரு பிரிவுகளில் பெங்களூரை விடச் சென்னை பின்தங்கிய இருக்கிறது. அதேநேரம் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சென்னை முன்னணியில் உள்ளது.

10வது இடத்தில் கோவை:

தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக நாட்டில் உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்களில் 43% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். நகர்ப்புறங்களைப் பொறுத்தவரைப் பெண்களில் 35.9% பேர் வேலை செய்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 120 நகரங்களை ஆய்வு செய்ததில் கோவை 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் Social Inclusion Score என்பது அந்த நகரம் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது, நகரத்தில் எத்தனை பெண்கள் வேலை செய்கிறார்கள், நகரின் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது. Industry Inclusion Score என்பது ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு எந்தளவுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+