ராயபுரம் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம்... சென்னையில் பிரபல ரவுடி கைது
சென்னை : சென்னை ராயபுரத்தில் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி விச்சுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஆர்கே நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போலீசார் சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்தனர்.

தப்பிய வாலிபர்
ஆனால் போலீசை பார்த்த உடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனடியாக போலீசார் அவரை துரத்தி சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தப்பி ஓடும்போது ரயில்வே தண்டவாள பகுதியில் தவறிவிழுந்து கால் எலும்பு முறிந்தது.

விசாரணை
மேலும் அவரை விரட்டி பிடித்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

22 வழக்குகள்
விசாரணையில் அவர் புதுவண்ணாரபேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசித்து வருபவர் விச்சு என்கிற சைலேஷ்குமார்
இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வழிப்பறி என 22 வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது,.

திடுக்கிடும் தகவல்
இராயபுரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விச்சுவை கைது செய்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications