பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஆம் ஆண்டில் குளோபல் கேபபிலிட்டி சென்டர்ஸ் (ஜிசிசி) மூலம் இந்தியாவிலேயே அதிக அலுவலக இடத்தை குத்தகைக்கு விட்ட நகரமாக சென்னை பதிவு செய்துள்ளது.

71 ஒப்பந்தங்களில் 6.02 மில்லியன் சதுர அடி வணிக ரியல் எஸ்டேட் குத்தகைக்கு விடப்பட்டது. இதன் மூலம் 176% ஆண்டு வளர்ச்சியைப் சென்னை பதிவு செய்து உள்ளது. இது GCC செயல்பாடுகளுக்கான விருப்பமான இடமாக சென்னையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது

Chennai recorded the highest office space leasing by global capability centres gcc in India in 2023

சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்குவதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி சென்னை இதில் முதலிடம் பிடித்துள்ளது.

ஏற்கனவே 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னையில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நான்கில் ஒரு பங்கிற்கு மேல் பெங்களூரில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சென்னை 2 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு.. மிக அதிக அளவில் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர்.

இதன் அர்த்தம் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் சென்னை முதல் முறையாக முதல் 3 இடங்களுக்குள் வந்தது என்று Colliers India அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4.6 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்த சென்னை 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்துள்ளது. 131 சதவிகிதம் வளர்ச்சியை சென்னை கண்டுள்ளது. 16.2 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை விற்ற பெங்களூர் 15.6க்கு மட்டும் விற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் மூலம் 4.20 சதவிகிதம் சரிவை பெங்களூர் சந்தித்துள்ளது.

சென்னை மட்டும்தான் 131 சதவிகிதம் வளர்ச்சியை கண்டுள்ளது. விரைவில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவில் சென்னை முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஜிசிசி: இது மட்டுமின்றி சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்குவதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி சென்னை இதில் முதலிடம் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள உலகளாவிய திறன் மையங்களால் (GCCs) மொத்தம் 20.8 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் குத்தகைக்கு விடப்பட்டது. இதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.

1. சென்னை - 6 மில்லியன் சதுர அடி
2. ஹைதராபாத் - 4.1 மில்லியன் சதுர அடி
3. பெங்களூரு - 3.8 மில்லியன் சதுர அடி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+