C.S. Karnan: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் சொன்ன! ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்ற ஓய்வு பெற்ற சி.எஸ்.கர்ணன் (சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன்), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ணன் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

chennai highcourt

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் 1955 ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். பிறகு 2016ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்திற்கு மாற்றலானார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கர்ணன் சென்னையில் வசித்து வந்தார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்க மறுத்ததால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு சென்ற கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். இதனால் அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதை ஏற்க மறுத்த அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தொடுத்தது. அது மட்டுமில்லாமல் 6 மாத கால சிறை தண்டனையையும் பெற்றார். இந்த சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் கொல்கத்தாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த நிலையில் அவர் கட்சியின் கொடி அறிமுக விழா நடந்தது. கொடியின் மேல் நீல நிறம், மஞ்சள் அடியில் பச்சை நிறம் இருந்தது. நடுவே ஒருவர் லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்துவது போல் படம் இடம் பெற்றிருந்தது. அந்த கட்சியின் பெயர் ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி (Anti Corruption Dynamic Party- ACDP) ஆகும்.

இந்த விழாவில் கர்ணன் பேசுகையில் இந்திய அரசுத் துறைகளிலும் நீதித் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. அதை ஒழிப்பதற்காகவே புதிய கட்சி தொடங்கியுள்ளேன். எங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. நாங்கள் எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் அந்த தேர்தலில் குறைந்த வாக்குகளையே பெற்றார்.

அது போல் 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் அவரது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+