சென்னை சாலையோர மரண குழிகள்.. தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு.. மின்வாரியம் சொன்ன விளக்கம்
சென்னை: சென்னையில் சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மது அருந்திவிட்டு வந்ததே விபத்துக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்திருப்பதாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் குணா 22, இவரது நண்பர் மதிவாணன் 24, இருவரும் பூவிருந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்றிரவு நைட் ஷிப்ட் வேலைக்கு சென்ற இவர், இருசக்கர வாகனத்தில் நண்பர் மதிவாணனுடன் சென்னீர்குப்பத்தை கடந்து சென்றுள்ளார்.

பூந்தமல்லியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த கேபிள் புதைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சுமார் பத்து அடி ஆழம் 20 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தில் கால்வாய் போல அமைக்க கம்பிகள் கட்டப்பட்டுள்ளன.
இரவு நேரம் என்பதால் மின்சார விளக்கு எரியவில்லை. அப்போது சாலையோரம் இருந்த தடுப்பின் மீது பைக் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற மதிவாணன் பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் மதிவாணனை மீட்டு பூவிருந்தமல்லி உள்ள அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த குணா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வீஸ் சாலையில் மின்வாரிய பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுத் நிலையில் அந்த பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்ற இடத்தில் அதற்கான எச்சரிக்கை பதாகைகள், மின்விளக்குகள் வைக்கப்படாததே விபத்துக்கான காரணமென சொல்லப்பட்டது.
பொதுமக்களின் குற்றச்சாட்டிற்கு மின்சார வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் தடுப்புகள் அமைத்தே பள்ளம் ண்டும் பணிகள் நடைபெற்றதாக மின்சார வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன' என்று மின் வாரியமும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணமென காவல்துறை தரப்பு மின்வாரியத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன என்றும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications