40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.. அங்கே வரப்போகும் திட்டம் இதுதான்!
சென்னை: சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது அங்கே ஓடும் கர்ணன் உள்ளிட்ட பழைய படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
உதயம் தியேட்டர் பின்னணி: உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.. என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1983 இல் கட்டப்பட்டது. இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதன்பின் பெரிய தியேட்டர்கள் இங்கே வந்துவிட்டது. அதேபோல் பல மல்டிபிளக்ஸ் இங்கே வந்துவிட்டது.
இதனால் இந்த தியேட்டரின் மவுசு குறைந்தது. அதோடு இல்லாமல் இந்த தியேட்டருக்கு அருகிலேயே தற்போது மால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மாடுகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications