நாளைக்கு நானும் இறக்கலாம்.. பாக்யராஜ் இறுதி அஞ்சலி போது இப்படி பேசி இருக்க கூடாது..! ராதாரவி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து பல வாரங்கள் கடந்துவிட்டாலும் அவரைப் பற்றி செய்திகளும் இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவங்களும் இன்னும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் ராதாரவி கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்யராஜ் இறுதி அஞ்சலி

பாக்யராஜ் இறுதி அஞ்சலிக்கு நேரில் சென்றது குறித்து பேசிய ராதாரவி யாரும் எதிர்பார்க்க அளவுக்கு ஓபனாக தன்னுடைய மனதில் இருந்ததை சொல்லி இருக்கிறார். அதாவது, நானும் பாக்யராஜ்க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நாளைக்கு நானும் இறந்து போகலாம்... அப்போது என் உடலுக்கும் மற்றவர்கள் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற சுயநலமும் உண்டு.

Radha Ravi K Bhagyaraj Bhagyaraj

நடிகர் ராதாரவி பேட்டி

அதே போல இன்று நாம் மற்றவர்களின் துயரத்தில் பங்கேற்றால்தான் நாளை நம்முடைய குடும்ப துயரத்திலும் மற்றவர்கள் வந்து நிற்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இவ்வளவு ஓபனாக பேசியது பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. சினிமா உலகில் போட்டி, கருத்து வேறுபாடு, விமர்சனம் என எவ்வளவோ இருந்தாலும் கடைசி நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது எவ்வளவோ முக்கியம் என்று இவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

பாக்யராஜ் மறைவுக்கு பிறகு மருமகள் உருக்கமான பதிவு.. சந்தோஷமான செய்தி இருக்கா? பிரபலம் இப்படி சொல்கிறாரே?
அதேபோல பாக்யராஜ் இறுதி அஞ்சலியில் நடந்த இன்னொரு சம்பவத்தை பற்றியும் ராதாரவி அந்த பேட்டியில் பேசினார். அதாவது பாக்யராஜின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது ரசிகர்களும் சில பத்திரிக்கையாளர்களும் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்தனர். அந்த நேரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உங்களுக்கு டிஆர்பி வேண்டும் என்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம் ஆனால் எங்களுடைய உணர்வுகளை விலைக்கு வாங்காதீர்கள். இந்த நேரத்தில் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டபடி கேட்டுக் கொண்ட வீடியோ அப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

கோபப்பட்ட ராதிகா, சுஹாசினி

அதேபோல பாக்யராஜ் உடலை வீடியோ எடுத்த ஒரு சிலரை பார்த்து சுஹாசினியும் கோபப்பட்டு இப்படி செய்தால் செருப்பால் அடிப்பேன் என்று திட்டி இருந்தார். அந்த காட்சிகளும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய ராதாரவி பத்திரிகையாளர்களை இப்படி திட்டுவது எனக்கு சரியாக தோன்றவில்லை. நம்மை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது.

நடிகர்களாகிய நாமும் அவர்களை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஏற்பாட்டளர்கள் சரியான கட்டுப்பாடுகளை செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களை ஒரு எல்லைக்குள் இருக்க சொல்லியிருந்தால் அதை அவர்கள் பின்பற்றி இருப்பார்கள்.. இதுதான் என்னுடைய மனநிலை என்று ராதாரவி பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+