வேஷ்டி சட்டையுடன் ஸ்ரீதர் வேம்பு.. ஜப்பான் ரயில் நிலையத்தில் நேர்ந்த சம்பவம்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேஷ்டி சட்டை அணிந்து ரயிலை பிடிக்க ரயில் நிலையத்தில் ஓடியதை வீடியோ எடுத்து வேடிக்கையாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

ஜோஹோ ஐடி நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. தமிழகத்தை சேர்ந்தவர். இவருக்கு பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது. ஸ்ரீதர் வேம்பு பில்லியனராக இருந்தாலும் கூட எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சாதாரணமாக உடையணிவதை வழக்கமாக வைத்துள்ளார்.

zoho-sridhar-vembu-wears-dhoti-and-ran-to-catch-a-train-in-japan

கோட்சூட் அணிவதை தவிர்த்து டீசர்ட் , சர்ட் அணிந்து தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து பயணிப்பதை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் தான் ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஜப்பான் சென்றார்.

இந்நிலையில் தான் ஜப்பானில் ரயிலை பிடிக்க ஸ்ரீதர் வேம்பு தன்னுடன் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஓடிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரீதர் வேம்பு வேஷ்டி, சட்டை அணிந்துள்ளார். தோளில பேக் போட்டுள்ளார். பல ஆயிரம் கோடிக்கு அதிபதி என்றாலும் கூட அவர் வேஷ்டி சட்டை அணிந்து ரயிலை பிடிக்க ஜப்பானில் ஓடியது கவனம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''ரயிலை பிடிக்க ஓடுவதை தவிர்த்து வேறு எதாலும் ஜப்பானில் இருப்பதை உணர்த்த முடியாது'' என்று வேடிக்கையாக கூறியுள்ளார். அதாவது ஜப்பான் ரயில் நிலையம் எப்போதும் கூட்டமாக தான் இருக்கும். ஏராளமான மக்கள் ரயில்களில் இடம்பிடிக்க அவசரஅவசரமாக ஓடுவது உண்டு. அந்த வகையில் தான் தான் ஜப்பானில் இருப்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீதர் வேம்பு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர் வேஷ்டி சட்டை, தோள் பேக் அணிந்து சாதாரணமாக ஓடியதை 'நோட்' செய்தனர். வேஷ்டி அணிந்து ஓடுவது சிரமம் என்றாலும் கூட அதனை ஸ்ரீதர் வேம்பு செய்து கமெண்ட் செய்ததால் இந்த பதிவு அதிகமானவர்களின் பார்வையை பெற்றது. பலரும் அவரது இந்த பதிவை பாராட்டினர்.

இந்த சமயத்தில் நெட்டிசன் ஒருவர், ''மிஸ்டர் ஸ்ரீதர் வேம்பு.நங்கள் உண்மையிலேயே வேஷ்டி அணிந்து தான் ஜப்பான் சென்றீர்களா? அது எப்படி சாத்தியமானது? ஏன் சாத்தியப்படுத்துனீர்கள்?'' என்று கேள்வி கேட்கார். அதற்கு ஸ்ரீதர் வேம்பு, ''ஆமாம், ஏன் சாத்தியமில்லை'' என்று பதிலளித்தார். இதுவும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இந்த ரயில் பயணத்தின்போது ஸ்ரீதர் வேம்பு 'மோட்டார்களின் லிவ்விங் லெஜண்ட்' என கூறபபடும் ஜப்பானின் பிரபல இன்ஜினியர்யோஷிபுமி ஷிமகாகி என்பவரை சந்தித்தார். அதுதொடர்பான போட்டோவையும் வர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+