உலகக்கோப்பையில் உச்சக்கட்ட அவமானம்.. பிரபலம் Speedக்கு நேர்ந்த அநீதி.. அர்ஜென்டினாவின் அட்டூழியம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இன்ஸ்ட்டா பிரபலம் speed அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி, களத்தில் நடந்த விஏஆர் சர்ச்சைகளால் ஏற்கனவே உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் அர்ஜென்டினா அணி வென்றது. மெஸ்ஸியின் இந்த அணி காலிறுதி சுற்றிற்கும் சென்றுள்ளது.

FIFA World Cup 2026 Lionel Messi 2026

ஆனால் விஷயம் அதுவல்ல.. இந்த ஆட்டத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள், தவறான முடிவுகள், சதி வேலைகள் எகிப்து ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு இடையில், அதே போட்டியில் கேலரியில் அரங்கேறிய மிக மோசமான இனவெறித் தாக்குதல் ஒன்று ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தலைகுனிய வைத்துள்ளது.

சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபல அமெரிக்க யூடியூபரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ஐஷோஸ்பீட் - IShowSpeed நேற்றைய போட்டியின் போது அர்ஜென்டினா ரசிகர் ஒருவரால் கடுமையான இனவெறிப் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஐஷோஸ்பீட்?

கால்பந்து உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகராக அறியப்படுபவர் ஐஷோஸ்பீட். லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாடும் போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதும், அர்ஜென்டினாவுக்கு எதிராக ஜாலியாகலைவ் ஸ்ட்ரீம் செய்வதும் இவரது வழக்கம்.

நேற்றைய அர்ஜென்டினா - எகிப்து போட்டியிலும், எகிப்து அணிக்கு ஆதரவாக மைதானத்தில் அமர்ந்து ஸ்பீட் தனது வழக்கமான பாணியில் நேரலை செய்து கொண்டிருந்தார்.

மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:

போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, ஸ்பீட் அமர்ந்திருந்த கேலரி பகுதிக்கு அருகே இருந்த அர்ஜென்டினா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர், கருப்பினத்தவரான ஸ்பீடை நோக்கி குரங்கு போல சைகை செய்து மிகவும் அநாகரிகமான முறையில் இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி, அர்ஜென்டினா ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி, "குரங்குகள் உள்ள zooவிற்கு சென்று அழு என்று ஸ்பானிஷ் மொழியில் இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தி முழக்கமிட்டுள்ளனர். இந்த ஒட்டுமொத்த அதிர்ச்சி காட்சியும் ஸ்பீடின் கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த வாரம் கேப் வெர்டி அணிக்கு எதிரான போட்டியின் போதும் இதே போன்ற ஒரு கசப்பான அனுபவத்தை அவர் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொந்தளிக்கும் இணைய உலகம்

களத்தில் விளையாட்டு ரீதியாக கிண்டல் செய்வதையும், ஒரு வீரரின் தீவிர ரசிகராக இருப்பதையும் தாண்டி, ஒரு நபரின் நிறத்தைக் கொண்டு மைதானத்தில் இப்படி மிருகத்தனமாகப் பாரபட்சம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கால்பந்து விளையாட்டிலோ, உலகக்கோப்பை மைதானங்களிலோ அல்லது இந்தச் சமூகத்திலோ இனவெறி, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எவ்வித இடமும் இல்லை. உலகக்கோப்பை என்றால் அது மரியாதையின் அடையாளம் அதை குழைக்கும் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+