"விஜய் சார் எங்களை வந்து பார்த்தே ஆகணும்” - 14வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முதலமைச்சர் விஜய் எங்களை வந்து பார்த்தே ஆகணும்" என போராடும் தூய்மைப் பணியாளர்கள் நமது ஒன் இந்தியா தமிழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 14வது நாளாக சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், தவெக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Chennai Sanitation Workers

தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆண்டு முதல் போராடி வரும் நிலையில், இப்போது முதலமைச்சராக உள்ள விஜய், அப்போது தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்துப் பேசி, ஆதரவு கொடுத்திருந்தார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் போராட்டத்தையோ எங்கள் கோரிக்கையையோ கண்டு கொள்வதில்லை என தூய்மைப் பணியாளர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

3வது வாரமாக போராட்டத்தை தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்களை ஒன் இந்தியா குழு நேரில் சந்தித்து, அவர்களின் குரல்களைப் பதிவு செய்துள்ளது. "எங்களின் கோரிக்கை பணி நிரந்தரம் தான், நாங்கள் கார் கொடு, வீடு கொடு என்று கேட்கவில்லையே, செய்யும் வேலைக்கு நியாயமான கூலி தானே கேட்கிறோம்" என அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

"தவெகவினரின் பேச்சு பேச்சளவில் மட்டுமே உள்ளது. அரசு எங்கள் கோரிக்கைக்கு இன்னும் செவிமடுக்கவில்லை. சி.எம் நாற்காலி கிடைத்துவிட்டால் மனதும் மாறிவிடுமா? எங்கள் துறைக்கு அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் விஜய் வந்து எங்களை பார்க்க வேண்டும்." என தூய்மைப் பணி செய்யும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+