இரவோடு இரவாக ரிப்பன் மாளிகையில் குவிந்த தூய்மை பணியாளர்கள்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்! பதற்றம்
சென்னை: பணி நிரந்தரம் கோரியும், தனியார் மயத்தை எதிர்த்தும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலை முதலே அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இரவில் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை இத்தனை காலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களே மேற்கொண்டு வந்தனர். அவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகவே இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நாட்களாகவே இதை வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்றைய தினம் சென்னை அறிவாலயம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் திடீரெனப் போராட்டத்தை நடத்தினர். அப்போது சிலர் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். ஒரு சிலர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
இந்தச் சூழலில் பிற்பகல் 2 மணியளவில் வேறு சிலர் தூய்மைப் பணியாளர்கள் கருணாநிதி நினைவிடம் அருகே திடீரெனக் குவிந்தனர். அங்குத் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் முழக்கமிட்டனர். அப்போது சிலர் கருணாநிதி நினைவிடத்திலும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்தும் கைது செய்யப்பட்டனர். இதனால் கருணாநிதி நினைவிடத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அருகே உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பிறகு மாலை நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே இரவு நேரத்தில் மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் அதிகப்படியான தூய்மைப் பணியாளர்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் தான் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகே அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இப்போது மீண்டும் அதே இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அங்குத் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண் தூய்மைப் பணியாளர்களாகவே இருந்தனர். இந்தச் சூழலில் தான் அவர்களை போலீசார் இரவோடு இரவாகக் கைது செய்தனர். அங்குச் சென்ற பெண் போலீசார், போராட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்தி உள்ளனர். இருப்பினும், அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரைக் குண்டுக்கட்டாகக் கைது செய்த போலீசார், அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சமூக நலக்கூடங்களில் அடைக்கப்படுவதாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் திடீரென நடந்த இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications