அய்யோ குப்பையில வைரக்கம்மலை போட்டுட்டேனே.. பதறியபடி வந்த மூதாட்டி.. நெகிழ வைத்த தூய்மை பணியாளர்கள்!
குப்பையில் வீசப்பட்ட வைரக்கம்மலை,ஒரு மணி நேரம் போராடி குப்பையில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்துள்ளனர் தூய்மை பணியாளர்கள்
சென்னை: தாம்பரத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் வைர கம்மலை குப்பையுடன் சேர்த்து வீசிய நிலையில், சுமார் 1 மணி நேரம் போராடி தூய்மை பணியாளர்கள் குப்பையில் இருந்து வைரக் கம்மலை மீட்டுக் கொடுத்தனர். அவர்களை அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி ராஜகீழ்பாக்கம். இங்கு ராதே ஷியாம் அவென் யூ பகுதியில் 65 வயதாகும் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். ஜானகி அம்மா இவர் இன்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி தனியாக வைத்திருக்கிறார் .

பின்னர் காலையில் தாம்பரம் மாநகராட்சி குப்பைகளை அள்ளும் வாகனம் தனது வீட்டின் அருகே வந்தவுடன் குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் போட்டிருக்கிறார். தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி கொண்டு சென்ற பின் தனது வீட்டிற்கு வந்த போது தனது காதில் மாட்டியிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பு உள்ள ஒரு வைர கம்மல் காணாமல் போனதை கண்டு மூதாட்டி ஜானகி அம்மாள் அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடி பார்த்திக்கிறார். ஆனால் வீட்டில் எங்குமே இல்லை,.
இதையடுத்து கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் குப்பை அள்ளி சென்ற வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனடியாக கார்மேகம் கம்மல் கிடைக்கிறதா என தூய்மை பணியாளர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார்.
ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து தூய்மை பணியாளர்கள் வைர கம்மலை மீட்டனர். பின்பு சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து அந்த வைர கம்மலை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்க்ள. குப்பையில் இருந்து தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களும் பாராட்டி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications