நள்ளிரவு வரை பதற்றம்.. சென்னை தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: சென்னையில் 9வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 8 நாள்களாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, சேகா்பாபு ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சா் சேகா்பாபு தலைமையில், மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலையில் சமரசப் பேச்சு நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் உழைப்பவா் உரிமை இயக்க நிா்வாகிகள் குமாரசாமி, சுரேஷ், ஜோதி, மகாலட்சுமி, ஜானகிராமன் உள்ளிட்ட 7 போ் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடந்தது.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகள், பணி நிரந்தரம் குறித்த பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீா்வு காண உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியை தூய்மைப் பணியாளா்கள் தொடரவும் அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, கோரிக்கைகள சட்டரீதியாக பரிசீலித்து ஆலோசிக்கப்பட்ட பிறகே முடிவை தெரிவிக்க முடியும் என்றும், அதனால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர்.

முதலமைச்சர் குடும்பத்தையே திட்டுகிறீர்களா? நாங்கள் நினைத்தால் முதல் நாளே கூட்டத்தைக் கலைத்திருப்போம். அதிமுக அரசாக இருந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும். நாங்கள் நியாயமாக இருந்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் சேகர்பாபு கோபமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இரு தரப்பினரும் வெளியேறினர்.
தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் 9 நாட்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய இரு மண்டலங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளி ல்கூட குப்பைகள் தேங்கிக் கிடப்பதாகவும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications