பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு.. சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.. காரணம் இதுதான்
சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடம், கோடை வெயில் கடுமையாக இருந்தது.. அதனால், திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க முடியவில்லை. வெயில் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் தாமதமாகவே திறக்கப்பட்டன.

இதனால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது... இதற்கு நடுவில், பலத்த மழை தமிழகத்தை தாக்கியது.. அதுவும், கடந்த மாதம் திடீரென பெய்த மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் சென்னையில் 6முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், கனமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 19.06.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி ஈடு செய்திடும் வகையில் 22.07.2023 அன்று (இன்று சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக செயல்படுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications