Heavy Rain: விடவே விடாது போல.. இன்னைக்கும் சென்னையில் கனமழை வெளுக்கும்.. நெல்லை, தென்காசிக்கும் அலர்ட்
சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை (Heavy Rain) வெளுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் கடந்த 27 ஆம் தேதி உருவான டிட்வா புயலினால் மழை கடந்த ஒரு வாரமாக கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் தொடரும் மழை
சிறிய சிறிய தூரலாகவும், திடீரென கனமழையும் கொட்டி வருகிறது. நேற்று இரவும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றும் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (03-12-2025) வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 5.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
13 மாவட்டங்களில் கனமழை
* 04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
* 05-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 06-12-2025 முதல் 10-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் கிளைமேட்
சென்னையில் இன்று (04-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (05-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்: 04-12-2025: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) 24,
* எண்ணூர் AWS (திருவள்ளூர்) 21.
* மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை) 20,
* மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 16.
* கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 15,
* மண்டலம் 02 மணலி புதுநகரம் (W15) (சென்னை) 13.
* மண்டலம் 02 மணலி (W19) (சென்னை) 12
* திண்டிவனம் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 02 மனாலி (W21) (சென்னை) தலா 11.
* பொன்னேரி (திருவள்ளூர்) 10,
* சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி (W17) (சென்னை), மண்டலம் 02 மணலி (W18) (சென்னை) தலா 9.
* கங்கவல்லி (சேலம்) 8.
* தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செங்குன்றம் (இருவள்ளூர்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ஆவடி (இருவள்ளூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), புழல் ARG (திருவள்ளூர்), தழுதலை (பெரம்பலூர்),KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) தலா 7 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications