இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.
சென்னை: இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என திடீர் கோரிக்கை எழுந்துள்ளது. ஆளும் அதிமுகவினரே இந்த கோரிக்கையை முன்வைத்தும் வருகின்றனர்.

மதுரை 2-வது தலைநகர்
அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை நியாயப்படுத்தி ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது 40 ஆண்டுகால பேசுபொருள். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் திருச்சிக்கு தலைநகரை மாற்றுவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

தலைநகரம் மாற்றம் ஏன்?
ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்து செல்ல 2 நாட்களாகிவிடுகிறது. இதனால்தான் மையமான திருச்சி பகுதிக்கு தலைநகரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. திருச்சிக்கு பதிலாக மதுரைக்கு தலைநகரை மாற்றலாம் என்கிற யோசனையும் ஒருதரப்பால் முன்வைக்கப்பட்டது.

அந்த பழைய கோரிக்கை
இந்த நிலையில் திடீரென 2-வது தலைநகர் என்கிற புதிய கோரிக்கை எழுந்திருக்கிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோக்கில் தமிழகத்தில் கிடப்பில் கிடக்கிற தமிழகத்தையே 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கூட சிலர் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னை
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி.யான ரவிக்குமார் இன்னொரு புது கோரிக்கையை முன்வைக்கிறார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்குத் தேவையில்லையா? இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்.இதை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த புதிய கோரிக்கை மீதும் விவாதங்கள் களைகட்டி உள்ளன.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு












Click it and Unblock the Notifications