ஜூன் மாத மழையில் நனைந்த சென்னை..எத்தனை சதவிகிதம் கூடுதல்..வானிலை சொல்லும் புள்ளி விபரம்
சென்னை: ஜூன் மாதத்தில் சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய அளவை விட 259 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக 4 செமீ அளவிற்கு மட்டுமே மழை பெய்ய வேண்டிய நிலையில் 16 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பெய்ய வேண்டிய மழையின் அளவை விட 463 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மட்டுமே தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யத் தொடங்கும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை மந்தமாக உள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிறுக்கிழமை மழை விடிய விடிய விடாமல் கொட்டித்தீர்த்தது.

சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்றைய தினம் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 18ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (ஜூன் 19) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ, ஆலந்தூர் மற்றும் தரமணியில் தலா 14 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ, கிழக்கு தாம்பரம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ, சென்னை கொரட்டூர் மற்றும் எம்ஜிஆர் நகரில் தலா 8 செ.மீ, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இது ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவை விட 259 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் 4 செமீ அளவிற்கு மழை பெய்ய வேண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16 செமீ அளவிற்கு பெய்துள்ளது. இது 259 சதவிகிதம் கூடுதலாகும். ஒரே நாளில் 463 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் சராசரியாக 3.5 சதவிகிதம் அளவிற்கு மழை பெய்ய வேண்டும். இப்போது 3.7 சதவிகிதம் அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications