ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறை பிடித்த வியாபாரிகள்.. போலீசார் வந்து மீட்ட சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சௌகார்பேட்டையில் தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் ஆய்வு செய்ய வந்த ஜிஎஸ்டி எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளை போலி அதிகாரிகள் என நினைத்து வியாபாரிகள் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகளை போலீசார் வந்து மீட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னை சௌகார்பேட்டை பார்க் டவுன் பகுதியில் உள்ள மிண்ட் தெருவில் மகிபால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ஜிஎஸ்டி எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வில் ஈடுபட்டனர். சோதனையை முடித்துக் கொண்டு கிளம்பும்போது, வந்தவர்கள் உண்மையான ஜிஎஸ்டி அதிகாரிகளா என்ற சந்தேகம் அங்கிருந்த வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Chennai Sowcarpet Traders Detain GST Officials Mistaking Them for Fake Inspectors Police Rescue Team

இதையடுத்து, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு, ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 பேர் மற்றும் உதவியாளர்கள் என 5 பேரை சிறை பிடித்தனர். ஜிஎஸ்டி அதிகாரிகள் என வந்து சோதனை நடத்திய யாரையும் வெளியே செல்ல விடாத வகையில் நிறுவனத்திற்கு வெளியே வியாபாரிகள் திரண்டு நின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூக்கடை பகுதி துணை ஆணையர் தலைமையிலான போலீசார் ஏராளமானோர் சென்று அதிகாரிகளை பத்திரமாக மீட்டு அழைத்துச் வந்தனர்.

இரு தரப்பினரையும் யானைகவுனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகத் திரண்டனர். இதையடுத்து, இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டீல் விற்பனை நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது யானை கவுனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ, வருமான வரித்துறை, ஜிஎஸ்டி சோதனை என போலி ரெய்டுகள் அடிக்கடி நடப்பதாக தகவல்கள் வருவதால் உண்மையான ஜிஎஸ்டி அதிகாரிகளை போலி அதிகாரிகள் என நினைத்து சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+