பெண் மருத்துவரை ஹோட்டலில் வைத்து பலாத்காரம்! சென்னை அரசு மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை! அதிரடி
சென்னை: கொரோனா காலத்தில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சக மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு மருத்துவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட ஏதுவாக, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த போது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, பெண் மருத்துவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் 'விசாகா' கமிட்டி விசாரணை மேற்கொண்டது. இதில், சம்பந்தப்பட்ட பெண் மருத்துவரை வெற்றிச்செல்வன் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் , ரூ.25000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் ரூ.20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications