சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் மொத்தமாக மாறிடுச்சு.. எப்படி இருக்கு பாருங்க! அடுத்த மாதமே வருது
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் தீர்வு காணும் விதமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரூட்டில் உள்ள மிக முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்று பரங்கிமலை ரயில் நிலையம். செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று அழைக்கப்படும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால், இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருப்பதை காண முடியும். காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சென்னையில் உள்ள மிக முக்கியமான வணிக பகுதிகளுக்கு இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்ல முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். செயிண்ட் தாமஸ் சர்ச் இந்த ஸ்டேசன் அருகே உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இது மட்டும் இன்றி சென்னையின் மெட்ரோ போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாக பரங்கி மலை உள்ளது. மேற்கொண்டு மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாக செல்கிறது. தற்போது விரிவாக்க பணியில் உள்ள பறக்கும் ரயில் வழித்தடமும் பரங்கிமலையில் சந்திக்கிறது. இதனால் சாலை, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக பரங்கிமலை அமையவுள்ளது.
201 மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் இந்த ஸ்டேஷனில் நின்று செல்கின்றன. 98 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவு வாயில்களும் விரிவுபடுத்தப்படுகின்றன. பயணிகளை கவரும் விதமாக அழகான வடிவமைப்புடன், வண்ணமய டிசைன்களுடன் அமைகிறது. புதிய புக்கிங் அலுவலகம் நவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளன. நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்கை, கூடுதல் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கான பார்க்கிங் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சிசிடிவி கேமராக்கள் வசதி ஆகியவையும் அமைக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துக்குள் முழுப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications