காதல் விவகாரம்: ரேஞ்ச் ரோவர் காரை ஏற்றி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலரின் பேரன் கைது
சென்னை: சென்னையில் பிளஸ் 2 பயிலும் மாணவியை காதலிக்கும் விவகாரத்தில், கல்லூரி மாணவர் ஒருவரை ரேஞ்ச் ரோவர் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் பேரன் சந்துருவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சொகுசு காரான ரேஞ்ச் ரோவர் மோதியதில் பலத்த காயமடைந்தனர். இதில், நிதின்சாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

ஆரம்பகட்டத்தில் இது வாகன விபத்து என்று சொல்லப்பட்ட நிலையில், நிதின்சாயின் தந்தை தனது மகன் கொலை செய்யப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் இது விபத்து அல்ல கொலை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிதின்சாயின் நண்பர் வெங்கடேஷ். இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலை மாணவி ஏற்காத நிலையில், தொடர்ந்து காதலிப்பதாக கூறி வெங்கடேசன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி பிரணவ் என்ற இளைஞரிடம் கூறியதையடுத்து வெங்கடேஷை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாணவியை காதலிக்கும் விவகாரம் தொடர்பாக பிரணவுக்கும், வெங்கடேஷுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷின் நண்பரான நிதின்சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து, ஹோட்டலில் இருந்து புறப்பட்ட நிதின்சாய், அபிஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, திருமங்கலத்தில் பிரணவ் மற்றும் அவரது நண்பர்கள் சொகுசு காரில் வந்து நிதின்சாய், அபிஷேக்கின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிதின்சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சொகுசு காரை ஓட்டியது கேகே நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரின் பேரனான சந்துரு என்பது தெரியவந்துள்ளது.
பிரணவ், அவரது நண்பர்கள் சுதன், திமுக கவுன்சிலரான தனசேகரனின் பேரன் சந்துரு ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் நண்பருக்காக சண்டை போட்டு, கொலையில் முடிந்திருக்கும் இச்சம்பவம் அப்பகுகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications