சென்னை ஏடிஎம்மில் வடிவேலு பட பாணி வழிபறி.. எஸ்ஐ ராமமூர்த்திக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் என்பவரிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சித்திக் (வயது 50). தயிர் வியாபாரியான இவர், தினமும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று தயிர் விற்பனை செய்வார். இதில் வரும் வருமானத்தை வங்கியில் செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அப்படித்தான் அண்மையில் தயிர் வியாபாரி சித்திக், தான் அன்றைய நாளில் தயிர் விற்ற பணத்தை வசூல் செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அருகே உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.

Chennai Sub-inspector arrested for robbing a yoghurt seller who came to pay at an ATM in kilpauk


சித்திக், வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை செலுத்த முயன்ற போது அங்கு 'வாக்கி-டாக்கி' கருவியுடன் சாதாரண உடையில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்திருக்கிறார். சித்திக் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை 'வாக்கி டாக்கி' வைத்திருந்த காவலர் பறித்துக்கொண்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து உரிய விளக்கமளித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு சித்திக்கிடம் கூறிவிட்டு அவர் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

பணத்தை இழந்த சித்திக் அதிர்ச்சி அடைந்து செய்வது அறியாமல் திகைத்து நின்றார். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார். அங்கிருந்த போலீசார், நீங்கள் கூறுவது போல பணத்தை யாரும் இங்கு கொண்டு வரவில்லை என்றும், யாரோ உங்களை ஏமாற்றி உள்ளனர் என்று கூறினார். உடனே சித்திக் நடந்த சம்பவம் குறித்து புகார் மனுவாக எழுதி கொடுத்தார்.

இந்த விவகாரம் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்திற்கு சென்றது. போலீஸ் வாக்கி-டாக்கி கருவியுடன் வந்து சித்திக்கிடம் பணத்தை பறித்து சென்ற நபர் யார்? என்று விசாரித்து உடனே கைது செய்யுமாறு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் தர்மராஜன், துணை கமிஷனர் கோபி ஆகியோரது மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். விசாரணையில் சித்திக்கிடம் பணத்தை பறித்து சென்றது ஒரு உண்மையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சப்-இன்ஸ்பெக்டர் பெயர் ராம மூர்த்தி என்பதும், 53 வயதாகும் அவர், ஐ.சி.எப். போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். அவரை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஏற்கனவே நீண்ட நாட்களாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவர் இது போன்று வேறு யாரிடமாவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே அவர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தயிர் வியாபாரி சித்திக்கிடம் பணத்தை பறித்த சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+