சென்னை புறநகர் பீரோக்களில் மின்னிய 216 சவரன் தங்க நகை.. 4 கிலோ வெள்ளி.. ஓனராலேயே நம்ப முடியாத சம்பவம்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. அதிலும் ஆட்டோக்களில் தனியாக ஏறுபவர்களை குறிவைத்தும் இந்த கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்தும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றி வரும் நிலையில் கொள்ளையர்கள் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக சென்னை காவல்துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்பவருக்கு 45 வயதாகிறது.. சைதாப்பேட்டை பஜார் சாலையில், "சாயார் ஜுவல்லரி" என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்..

ரோஹித் எங்கே
இவரது கடையில், ரோஹித் என்ற 30 வயது இளைஞர் 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார்.. இவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், சுந்தருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. எனவே, சைதாப்பேட்டையிலேயே ரோஹித்துக்கு வாடகைக்கு வீடு எடுத்து தந்தார்..
இந்நிலையில், தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று ராஜஸ்தான் சென்ற ரோஹித், மீண்டும் சென்னை வேலைக்கு கடந்த 7ம் தேதி வந்தார்.. ஆனால், நேற்று காலை கடையை திறந்து ரோஹித் வருகைக்காக சுந்தர் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் வராததால், அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தார்.. அங்கேயும் ரோஹித் இல்லை... செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது..
நகைகளின் இருப்பு
இதனால் சந்தேகமடைந்த சுந்தர், கடையிலிருந்த நகைகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.. அப்போதுதான், பிரேஸ்லெட் விற்பனை பிரிவில், 60 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.. இதனால் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தார்.. அப்போதுதான், முன்தினம் இரவே நகைகளை ரோஹித் திருடியதும், நகை அலமாரியை பூட்டி, சுந்தரிடம் சாவியை கொடுத்து தப்பியதும் தெரியவந்தது.
கொட்டிவாக்கத்தில் மகேஷ்குமார் என்பவர் வீட்டுக்கு , நேபாளத்தை சேர்ந்த ரமேஷ், 25, அவரது மனைவி பினிதா, 23, ஆகியோர், 3 வயது மகனுடன் கடந்த மார்ச், 22ம் தேதி வீட்டுவேலை தேடி வந்தனர். இதனால், தன்னுடைய வீட்டின் பின்பக்கம் இருந்த ஒரு பகுதியை, மகேஷ்குமார் ஒதுக்கி தந்துள்ளார். மகேஷ்குமார் குடும்பத்துடன் 2 நாட்களுக்கு முன்பு, வேலுாரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
நேபாள தம்பதி
ஆனால், நேபாள தம்பதி, குழந்தையுடன் காணாமல் போயிருந்தனர், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, மகேஷ்குமார் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவில் இருந்த, 60 சவரன் நகையையும் திருடி சென்றிருக்கிறார்கள்.
அண்ணா நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில், 216 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை நடந்துள்ளது, மிகப்பெரிய பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.. இந்த கொள்ளை சம்பவங்களையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications