தாம்பரம் முதல் கடற்கரை ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்.. பயணிகள் அவதி
சென்னை: தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக கோடம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்..
சென்னை எழும்பூர் -பல்லாவரம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இன்று ரயில்சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12, 12.10, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் ரயில்களும் இன்று மதியம் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது பராமரிப்பு பணி காரணமாக விரைவுப்பாதையில் சில சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் மறு மார்க்கமாக கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் ரயில்கள் குறைவான சேவைகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக கடற்கரை -கோடம்பாக்கம் இடையே மட்டும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications