சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் தாமதம்.. பனி மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் தாமதமாக இயங்கி வருவதால் காலையில் பணிக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது பனிக்காலம் நிலவி வருகிறது. இரவு முதல் அதிகாலை வரை பனியால் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கடும் பனிமூட்டம் என்பது நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
காலை 7.30 மணியாகியும் பனி மூட்டம் குறையவில்லை. இதனால் செங்கல்பட்டு - சென்னை இடையேயான புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பனி மூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்று வருகின்றன. இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விரைவு ரயில்கள் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை தாமதமாக இயங்கி வருகின்றனர். பொதிகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கிறது. பனி மூட்டம் அதிகம் இருப்பதால் ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் காலதாமதமாக இயங்கி வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications