மாடியில் தொங்கிய மகன்.. கதறிய பெண் திமுக கவுன்சிலர்.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னை கீழ்க்கட்டளையில் தாம்பரம் 18 வது வார்டு பெண் கவுன்சிலரின் மகன் வீட்டில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் சிக்கியிருக்கிறது. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்
தாம்பரம் மாநகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள பிரேமலதா என்பவரின் மகன் கோபிநாத், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தற்கொலைக்கு முன் கோபிநாத் எழுதிய கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவருடைய மனைவி பிரேமலதா. திமுகவைச் சேர்ந்த பிரேமலதா தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுடைய மகன் கோபிநாத் (வயது 28). பொறியியல் பட்டதாரியான கோபிநாத் நேற்று முன்தினம் இரவு செல்போனில் நண்பர்களிடம் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டின் மாடிக்கு சென்றாராம்.

தூக்கில் மகன்
ஆனால் மாடியில் இருந்து நீண்டநேரமாகியும் கீழே இறங்கி வரவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாயார் பிரேமலதா, மாடிக்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கு தனது மகன் கோபிநாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார்.

அக்கம்பக்கம்
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து என்ன நடந்தது என்று பார்த்திருக்கிறார்கள். இதனிடையே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியோடு கோபிநாத்தை தூக்கு கயிற்றில் இருந்து மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கோபிநாத் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

கடிதம் சிக்கியது
இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த பின்னர் அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கே பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்திருக்கிறார்கள். அதில் கோபிநாத் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி இருக்கிறது.

மன அழுத்தம்
அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழப்பிடிக்கவில்லை என எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தற்கொலைக்கான காரணம் என்று பெற்றோரிடம் விசாரித்திருக்கிறார்கள். கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், இதற்காக தீவிரமாக பெண் பார்த்து வந்திருக்கிறார்கள். இது ஒருபுறம் எனில் கோபிநாத் கடந்த சில நாட்களாக மகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

உதவி எண்கள்
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications