ரத்தப்போக்கு நிற்கவேயில்லை.. கதறி துடித்த பெற்றோர்! சென்னை தாம்பரம் அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி
சென்னை: சென்னை தாம்பரம் அரசு பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளார். அவரது பேச்சை நம்பி மாணவி சென்ற நிலையில், அடுத்தடுத்து நடந்த சம்பவம் குடும்பத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் அதற்குமேல் பதற வைத்துள்ளது.. என்ன நடந்தது மாணவிக்கு?
தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
வண்டலூர் அரசு பள்ளி மாணவி
நேற்றுகூட, வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் பரவி, பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு சென்னையையே அதிர வைத்தனர்.. ஆனாலும், இதுகுறித்த ஆதாரங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்ந்து பள்ளி மாணவி விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தாம்பரம் போலீசார் உறுதி தந்துள்ளனர்.. அதற்குள் இன்னொரு பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது..
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துசாமி (22), டிப்ளமோ முடித்துவிட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.
நிற்காத ரத்தப்போக்கு
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி சிறுமியை நேரில் சந்திக்க வேண்டும் என்று முத்துசாமி தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டேயிருந்தாராம்.. இதனால், மாணவியும், அவரது பேச்சை நம்பி, அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது தாம்பரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற முத்துசாமி, அங்கு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பிறகு சிறுமியை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கிளாம்பாக்கம் போலீஸ்
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோதுதான், முத்துசாமி பற்றி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து முத்துசாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் நட்பு ஏற்பட்டதாகவும், இதையே சாக்காக வைத்து, சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொணடார்... இதையடுத்து முத்துசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.. தொடர்ந்து அவரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கண்காணிப்பு அவசியம்
எனினும், சோஷியல் மீடியாவில் பள்ளி மாணவிகள் யாரிடம் பழகுகிறார்கள், யாரை நம்புகிறார்கள் என்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்தபடியே உள்ளது. அதேசமயம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது...!!


Click it and Unblock the Notifications
