காலி பாட்டிலை கொடுத்தால் உடனே கைக்கு வரும் ரூ.10.. சென்னையில் அறிமுகமான புதிய ஸ்கேனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் தனது சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கான காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டுவந்துள்ளது. பீரோ வடிவிலான ஆட்டோமெடிக் கருவி மூலம் காலி பாட்டில்களை பெற்றுக்கொண்டு, தொகை செலுத்தும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதை விட எளிமையான முறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மது பாட்டில்கள் விற்கப்படும்போது கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பிறகு காலி பாட்டிலை திரும்ப கொடுக்கும்போது, அந்த தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை இன்னும் சூப்பராக செயல்படுத்தவும், கடைகளில் உள்ள இட நெருக்கடியை சமாளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம், இப்போது புதிய தொழில் நுட்ப வழிமுறைகளைப் பரிசீலித்து வருகிறது.

TASMAC Empty Bottle 10 Refund Chennai 10

காலி பாட்டில் 10 ரூபாய்

ஏற்கனவே சென்னை எழும்பூரில் உள்ள ஒரு மதுக்கடையில் பீரோ வடிவிலான ஆட்டோமெடிக் கருவி மூலம் காலி பாட்டில்களை பெற்றுக்கொண்டு, தொகை செலுத்தும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் குறைந்த இடவசதி கொண்டவையாக இயங்கி வருகின்றன.. அதனால் எல்லா கடைகளிலுமே இப்படியா பெரிய பெரிய ஆட்டோமெடிக் கருவிகளை நிறுவுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இப்படியான சிக்கலை கருத்தில் கொண்டு, தினமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மது விற்பனை நடைபெறும் கடைகளில், "பாஸ்ட் ஸ்கேனர்" என்ற கருவியை பயன்படுத்தி வாகனங்களிலேயே நேரடியாகக் காலி பாட்டில்களை வாங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கேனர் கருவி - ஆன் கேஷ்

இந்த கூடுதல் வசதி இப்போது சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தலா ஒரு கடையில் சோதனை முயற்சியாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில், வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் ஒருவர் இருப்பார். கஸ்டமர்கள் கொண்டுவரும் காலி பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை அந்த பணியாளர் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்வார். இந்தத் தரவுகளைச் சரிபார்த்த பிறகு பாட்டிலைப் பெற்றுக்கொண்டு, உடனடியாக 10 ரூபாயைத் திரும்ப தருவார்..
இந்த திட்டத்தின் மூலம் தினமும தேவையான காலி பாட்டில்களை தடையின்றித் திரும்பப் பெற முடியும் என்று டாஸ்மாக் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநபர்களும் இறக்கப்பட திட்டம்?

இப்படி வாகனங்களில் சேகரிக்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் டாஸ்மாக் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும்.

இதனிடையே, காலி பாட்டில்களை திரும்ப பெறும் பணியை செய்வதில் தங்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. இதனால், இத்திட்டத்தை மேலும் சீரமைப்பது குறித்தும், பணியாளர்கள் அல்லாத பிற நபர்களைக் கொண்டு பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

செல்போன் மாடலில் புதிய கருவி?

கூட்ட நெரிசல் மிகுந்த பீக் நேரங்களில் பாட்டில்களை விரைவாக திரும்ப பெறுவதற்காக மொபைல் போன் வடிவிலான சிறிய ஸ்கேனர் கருவிகளையும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இத்தகைய மாற்றங்கள் மூலம் பாட்டில்களை சேகரிக்கும் பணி முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தை மேலும் சீரமைப்பது குறித்தும், பணியாளர்கள் அல்லாத வெளிநபர்களை கொண்டு பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+