ஏர் இந்தியா விமான விபத்துக்கு.. தான்தான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய சென்னை பெண்.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னையை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கு தானே காரணம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது முன்னாள் ஒருதலை காதலன் பெயரில் மெயில் ஐடி தொடங்கி இவர் இந்த மெயிலை அனுப்பி உள்ளார்.
டெலாய்ட் நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும், பயிற்சி பெற்ற ரோபோட்டிக்ஸ் பொறியாளருமான ரேனே ஜோஷில்டா, தனது ஒருதலைக் காதலனை பழிவாங்க வேண்டும் என்று இப்படி செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருதலைக் காதல் விவகாரத்தில், தான் விரும்பியவர் வேறொரு பெண்ணை மணந்ததால், அவரைப் பழிவாங்க அந்த பெண் இப்படி செய்துள்ளார். சென்னை டெக்னாலஜி கன்சல்டன்ட் பெண்ணான அவர், ஏர் இந்தியா விமான விபத்துக்கு தானே காரணம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் பின்னணி
2025 ஜூன் 3-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு இவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சலில், "உங்கள் ஏரியாவில் உள்ள போலீசார் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களால் எதுவும் செய்ய முடியாது... அவர்களால் உங்களை காப்பாற்ற முடியாது.. உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப் போகிறோம்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தார். ரேனே ஜோஷில்டா இதேபோல் இன்னும் சில பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் 2 வாரம் முன் ஏர் இந்தியா AI171 விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்குப் பிறகு பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கும் இதேபோன்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு மின்னஞ்சலில், "ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கியது நாங்கள்தான். குஜராத் முதல்வரை கொல்லும் விதமாக நாங்கள் அந்த சம்பவத்தை செய்தோம். விமான விபத்து நடக்கும் என்று போலீசாரிடம் நாங்கள் முன்பே எச்சரித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
விமான விபத்து ஒரு புரளி என்று போலீசார் நினைத்து அதை புறக்கணித்திருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நான் விடுக்கும் எச்சரிக்கைகள் பொய் இல்லை என்பது இதன் மூலம் தெரியும் என்று ரேனே ஜோஷில்டா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மிரட்டல்களை இவர் வரிசையாக விட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அவர் அனுப்பி உள்ளார். இந்த மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளிகள்தான். ஆனால் இவர் விடுக்கும் மிரட்டல்கள் காரணமாக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் பாதுகாப்புக்காக மக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நடந்து உள்ளன .
கைது செய்யப்பட்ட ரேனே ஜோஷில்டா
30 வயதான ரேனே ஜோஷில்டா குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல. போலீசார் கூறுகையில், அவர் நன்கு படித்தவர். அதுமட்டுமின்றி ரோபோட்டிக்ஸ் பொறியியலில் பின்னணி கொண்டவர். அவர் 2022 முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
அவர் திவிஜ் பிரபாகர் என்பவரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அந்த இளைஞர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்து அந்த பெண் பழிவாங்கத் தொடங்கினார். அவர் வெறுமனே கோபத்தை வெளிப்படுத்தாமல், திவிஜ் வாழ்க்கையை முழுவதுமாக அழிக்க நினைத்தார்
இதையடுத்து திவிஜ் பிரபாகர் பெயரில் ஜோஷில்டா போலியான மின்னஞ்சல் முகவரிகளைப் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பிரபாகரின் பெயரில் பல மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கியுள்ளார். தான் அவருடைய மனைவி என்று போலியான திருமணச் சான்றிதழை உருவாக்கி, அதை அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பரப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு கடந்த சில ஆண்டுகளாக பிரபாகருடன் பழகிய பெண்களை போலியான WhatsApp மற்றும் Instagram கணக்குகள் மூலம் ஜோஷில்டா துன்புறுத்தியுள்ளார்.
ஜோஷில்டா டார்க் வெப், பாகிஸ்தான் சர்வர்கள் கொண்ட விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்ஸ் (VPN) மற்றும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி தனது அடையாளத்தை மறைத்துள்ளார். அவர் சுமார் 80 இ சிம் கார்டுகளை வாங்கி நூற்றுக்கணக்கான போலி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு 13 மிரட்டல் மின்னஞ்சல்களும், ஜெனீவா லிபரல் பள்ளிக்கு நான்கு மின்னஞ்சல்களும், திவ்ய ஜோதி பள்ளிக்கு மூன்று மின்னஞ்சல்களும், பி.ஜே. மருத்துவக் கல்லூரிக்கு ஒரு மின்னஞ்சல்களையும் அனுப்பி உள்ளார்.
ஜோஷில்டா தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி தனது தடயங்களை மறைக்க முயன்றாலும், ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்துவிட்டது. இதுகுறித்து பேசிய ஆணையர் சிங்கால், "நாங்கள் நீண்ட காலமாக அவரை கண்காணித்து வந்தோம். அவர் மிகவும் புத்திசாலி. தனது அடையாளத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால், அவர் செய்த ஒரு சிறிய தவறு காரணமாக, சென்னையில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரைப் பிடித்தோம்.
அவர் செய்த அந்த "சிறிய தவறு", ஒரே லேப்டாப்பில் இருந்து தனது உண்மையான மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகளில் உள்நுழைந்ததுதான். இதன் மூலம், அவரது IP முகவரி வெளிப்பட்டது. அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் சில வாரங்களாக கண்காணித்த பிறகு, ஜூன் 21 சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஜோஷில்டாவை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து டிஜிட்டல் மற்றும் உடல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications