சென்னையில் கால் பதிக்கும் டெஸ்லா.. இந்த வாரமே புதிய ஷோரூம் திறப்பு.. மிக முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது விற்பனையை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் புதிய டெஸ்லா ஷோரூமை திறக்கவுள்ளனர். இந்த வாரமே புதிய டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் பிரிவில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். எலெக்ட்ரிக் கார் என்றாலே அது ஓட்டுவதற்கு போர் அடிக்கும், மெதுவாகவே செல்லும் என்ற நிலையை மாற்றி, பல புதுமைகளை புகுத்திய நிறுவனம் தான் டெஸ்லா!

tesla Elon musk

சென்னையில் ஷோரூம்

ஏற்கனவே பல நாடுகளில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்கெட் வலுவாக இருக்கிறது. இப்போது இந்தியாவிலும் டெஸ்லா தனது மார்கெட்டை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி, மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் டெஸ்லா தனது ஷோரூமை அமைத்துள்ள நிலையில், சென்னையிலும் இப்போது ஷோரூமை திறக்கவுள்ளது. இந்த வாரமே புதிய ஷோரூம் திறக்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் டெஸ்டா ஷோரூம் அமைந்திருந்த நிலையில், தென்னிந்தியாவில் 3வது நகரமாக சென்னையில் டெஸ்லா அமைகிறது.

டெஸ்லா

இந்தியாவில் டெஸ்லாவுக்கு இந்த செப்டம்பர் மாதம் விற்பனை சிறப்பாகவே இருக்கிறது. இதுவரை சுமார் 150 கார்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில் இதுவரை இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட கார்களை டெஸ்லா விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் 38 கார்கள் விற்பனையாகியுள்ளன நிலையில், சென்னையில் புதிய எக்பிரியன்ஸ் சென்டர் திறக்கப்படுவது விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு மாடல்கள்

தற்போது இந்திய சந்தையில் டெஸ்லாவின் இரண்டு மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாடல் Y ப்ரீமியம் ரியர் வீல் டிரைவ் காரின் விலை ரூ.50.89 லட்சமாக உள்ளது. 5 பேர் அமரக்கூடிய இந்த கார் 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டும். இந்த காரின் அதிகபட்ச ரேஞ்ச் 500 கி.மீ. வரை உள்ளது. இது தவிர மாடல் Y L ஆல் வீல் டிரைவ் என்ற காரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ.61.99 லட்சத்தில் தொடங்குகிறது.. 5 வினாடிகளில் 0-100 கி.மீ. வேகத்தை எட்டும் இந்த கார், 681 கி.மீ. வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கிறது.

தமிழ்நாடு

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தமிழ்நாடு வளர்ந்து வரும் முக்கிய மார்கெட்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் இதுவரை 19,700க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதில் சுமார் 800 கார்கள் சொகுசு நிறுவனங்களின் கார்களாகும்! இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் விற்பனையை அதிகரிக்க டெஸ்லா புதிய ஷோரூமை சென்னையில் தொடங்குகிறது. இதன் மூலம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+