Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வாகன ஓட்டிகளுக்கு இந்த வீடியோ பெரிய பாடம்.. நடுரோட்டில் பெண் செய்த செயல்.. உடனே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியாவில் இருசக்கர வாகனம் முன்பாகவும்,பின்னால் கார் ஒன்றும் செல்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் செய்த செயல், கார் ஓட்டுநரை பதற வைத்தது. நல்ல வேளையாக விபத்து ஏற்படவில்லை.

இரு சக்கர வாகன ஓட்டிகள் தயவு செய்து உங்கள் வாகனத்தில் கண்ணாடி இரு பக்கமும் இருக்கிறதா என்பதை பாருங்கள். ஒருவேளை கண்ணாடி இல்லாவிட்டால் உடனே கண்ணாடி வாங்கி பொருத்துங்கள். ஏனெனில் சைடு பார்க்காமல் செய்யும் சிறு தவறு கூட, மிகப்பெரிய விபத்திற்கு காரணமாக அமைகிறது.

Chennai: The lady simply jumped off the moped and stood in the middle of the road; see the video

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை,திருச்சி போன்ற பெருநகரங்களில் வாகனம் ஓட்டுவோர், எதிரே வரும் வாகனத்தை போல், பின்னால் வரும் வாகனத்தை பற்றி கவனம் செலுத்துவது நல்லது. ஏனெனில் எதிரே வாகனம் வராதது. நகர்புறங்களில் சாலை அமைப்பு இரு சாலைகளும் தனித்தனியாக இருக்கும். ஆங்காங்கே தடுப்புகளில் திரும்பி தான் வலது புறமோ, இடதுபுறமோ சாலைகளில் திரும்பி செல்ல முடியும்.

சென்னை போன்ற நகரங்களில் சாலைகளில் பின்னால் வரும் வாகனங்கள் உங்கள் வலது பக்கத்திலோ இடது பக்கத்திலோ முந்தி செல்ல முயலுவார்கள். அப்போது நீங்கள் சைடு பார்க்காமல் திடீரென இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ வாகனத்தை வளைத்தால் நிச்சயம் பேராபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஏற்படும் விபத்துக்களுக்கு பின்னால் வரும் வாகனத்தை பார்க்காமல் வாகனத்தை திருப்புவதே முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல் முன்னால் செல்லும் வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஹாரன் அடிப்பது, வாகனத்தை முட்டுவது போல் வேகமாக பின்னால் சென்று மிரட்டுவது போன்றவையும் விபத்திற்கு காரணமாக உள்ளது.

சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருசக்கர வாகனம் முன்பாகவும், பின்னால் கார் ஒன்றும் செல்கிறது. அப்போது இருசக்கர வாகனம் இடதுபுறம் திரும்புவதற்காக சாலையின் ஓரத்தில் நிற்கிறது. அப்போது திடீரென இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண், பின்னால் கார் வருவதை பார்க்காமல் குதித்து அப்படியே சாலையே நோக்கி நகர்கிறார்.

பின்னால் வாகனம் வரும் என்பதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் வாகனத்தில இருந்து அவர் இறங்கியதால் மிகப்பெரிய விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. நல்லவேளையாக ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் காரில் வந்தவர் சுதாரித்து வாகனத்தை சிறிய அளவில் வலதுபுறம் வளைத்து சென்றுவிட்டார்.

வலதுபுறம் இருசக்கர வாகனம் வந்த சூழலில் நல்ல வேளையாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக அந்த பத்திரிக்கையாளர் பெண் செய்த செயலை குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு பெரிய பாடம் ஆகும். நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+