Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக சென்னை டூ தூத்துக்குடிக்கு ரூ.3,600 என கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.6,500 என கட்டணம் உயர்ந்திருக்கிறது.

விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விமான கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்கிற நிலை இருந்தது. இந்நிலையில், கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

Chennai-Thoothukudi Flight Fares

இன்டிகோ அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இன்டிகோ, விமான எரிபொருள் (ATF) விலைகளில் ஏற்பட்ட கடும் உயர்வால், ஏப்ரல் 2 முதல் டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை திருத்தியமைப்பதாக நேற்று அறிவித்தது. தூரத்தைப் பொறுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் ₹275 முதல் ₹10,000 வரை புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.

புதிய கட்டணம்

இந்த நடவடிக்கையால், சர்வதேச விமானக் கட்டணங்கள் உயரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், உள்நாட்டுப் பயணிகளுக்கு தாக்கமிருக்கும். உள்நாட்டு வழித்தடங்களுக்கான எரிபொருள் கட்டணம் ₹275 முதல் ₹950 வரையும், சர்வதேச வழித்தடங்களுக்கு ₹900 முதல் ₹10,000 வரையும் இருக்கும் என இன்டிகோ தெரிவித்துள்ளது.

எவ்வளவு உயர்வு?

முன்னதாக, மார்ச் 14 முதல் மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட ஜெட் எரிபொருள் விலையுயர்வுக்கு மத்தியில், ₹425 முதல் ₹2,300 வரையிலான எரிபொருள் கட்டணங்களை விமான நிறுவனம் அமல்படுத்தியிருந்தது. சர்வதேச விமானச் சேவைக்கான விமான எரிபொருள் விலைகள் கடந்த மாதத்தில் இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக இன்டிகோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கட்டண உயர்வு

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி வழித்தடத்தில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

  • சென்னை-தூத்துக்குடி - பழைய கட்டணம் ரூ.3,600, புதிய கட்டணம் ரூ.6,500
  • சென்னை-மதுரை - பழைய கட்டணம் ரூ.3,100, புதிய கட்டணம் ரூ.5,460
  • சென்னை-திருச்சி - பழைய கட்டணம் ரூ.3,000, புதிய கட்டணம் ரூ.4,520
  • சென்னை - கோவை - பழைய கட்டணம் ரூ.4,350, புதிய கட்டணம் ரூ.4,960

என விமான கட்டணம் அதிகரித்திருக்கிறது. கட்டண உயர்வு காரணமாக நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+