சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.. வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. பயண நேரம் குறைய போகுது.. செம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை ( Chennai Tirupati Highway - NH.716) எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்றாக உள்ளது. இதில் திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே வேப்பம்பட்டு, திருநீர் குளம், தொழுதூர், செவ்வாப்பேட்டை வழியாக 18 கிலோமீட்டர் தூரம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ளதாகவும், வரும் செப்டம்பருக்குள் இந்த சாலை திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினமும் அதிக அளவிலான பயணிகள் சென்று வரும் நிலையில், பயண நேரம் 45 நிமிடம் வரை நேரம் வரை குறையும் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

chennai-tirupati-highway-four-lane-expansion-nears-completion

சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்றாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இந்த சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை ( NH.716) பாடியில் தொடங்குகிறது.

புத்துார் - ரேணிகுண்டா வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது. இதனால், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக திருவள்ளூர் சிட்டி மற்றும் வேப்பம்பட்டு பகுதியில் பல இடங்களில் குறுகலாக உள்ளன.

இறுதி கட்டத்தில் பணிகள்

இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பீக் நேரங்களில் டிராபிக் நெரிசல் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் திருவள்ளூர்- திருநின்றவூர் இடையே வேப்பம்பட்டு, திருநீர் குளம், தொழுதூர், செவ்வாப்பேட்டை வழியாக 18 கிலோமீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்பொது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ரூ. 304 கோடி செலவில் உருவாகும் இந்த நெடுஞ்சாலையில் தலங்காஞ்சேரி, தண்ணீர் குளம், திருநின்றவூர் உள்ளிட்ட 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையில், சாலையோர இரும்பு தடுப்புகளும், சாலையோரத்தில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நவீன முறையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்

தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருத்தணி, திருப்பதி மற்றும் திருவள்ளூர், வேப்பம்பட்டு நகருக்குள் செல்லும் வகையில் இந்த சர்வீஸ் சாலைகள் அமைக்கபடுகிறது. கிட்டத்தட்ட இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. மொத்தம் உள்ள 18 கிலோ மீட்டர் தூரத்தில் இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டுமே பணிகள் முடிவடையாமல் உள்ளன.

இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலை திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். காலப்போக்க்கில் இந்த சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயண நேரம் குறையும்

தற்போது பாடியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இந்த நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயண நேரம் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதன்படி பார்த்தால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 30-ல் இருந்து 45 நிமிடம் வரை குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினமும் அதிக அளவில் பயணிகள் பயணிக்க கூடிய நிலையில் பயண நேரம் 45 நிமிடம் வரை நேரம் வரை குறையும் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+