10 வருட ஏமாற்றத்திற்கு முடிவு.. சென்னையில் தொடங்கிய புதிய ஐடி சகாப்தம்.. 21 மாஸ்டர் பிளான் ரெடி!
சென்னை; சென்னையில் 21 புதிய ஐடி பார்க் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னை ஐடி துறை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னோடி. சென்னையில் முதல் ஐடி பூங்காவை கொண்டு வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அதன்பின் ஐடி பூங்காங்கள் பெரிய அளவில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டாலும் முழுமையாக சென்னையை போல பெரிதாக எங்கும் பல ஐடி நிறுவனங்கள் வரவில்லை. அதிலும் கடந்த 2011- 2021 கால கட்டத்தில் சென்னையை ஹைதராபாத் போன்ற நகரங்கள் ஐடி துறையில் முந்தின. சென்னை ஐடி துறையில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்தது.,
தமிழ்நாடு அரசு அதிரடி: இந்த நிலையில்தான் கடந்த 2022 பட்ஜெட்டில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க புதிய ஐடி நிறுவனங்களை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
10 இடங்களில் ஐடி பார்க்: அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று சமீபத்தில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாற்றம் : சென்னையில் 21 புதிய ஐடி பார்க் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னை ஐடி துறை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-2029 வரை சென்னையில் வரவிருக்கும் முக்கிய IT பூங்காக்களின் பட்டியல், மில்லியன் சதுர அடி பரப்பளவில் கொடுக்கப்பட்டு உள்ளது.
1. Fintech City Ph-1 : குறைந்தது 10 மில்லியன் சதுர அடி
2. DLF டவுன்டவுன் : 6.8
3. எல்&டி இன்னோவேஷன் கேம்பஸ் : 6.5
4. RMZ ஒரு விரிவாக்கம்: 5.1
5. சத்திய பெருங்குடி : ~4
6. சர்வதேச தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கம் : 3.3
7. TCS சிறுசேரி Ph-2 : 3.2
8. தூதரகம் சிறப்பான விரிவாக்கம் : 3
9. ரஹேஜா பள்ளிக்கராணி : ~2
10. லீ கிம் தஹ் சிறுசேரி : ~2
11. பிரிகேட் ரேடியல் Rd : 1.5
12. ASV ஐகான் (நாவலூர்) : 1.2
13. பிரஸ்டீஜ்- WS : 1
14. பாஷ்யம் கிண்டி : ~1
15. காசாகிராண்ட் (3 திட்டங்கள்) : ~1.1
16. ASV ஹுசைனி Ph-1 : 1
17. TNHB, Peters Rd : ~1
18. கேப்ஜெமினி விரிவாக்கம் : ~0.8
19. பிரிகேட் அண்ணாசாலை : ~0.6
20. டைடல் பார்க் ஆவடி : 0.55
21. பீனிக்ஸ் மால் ஐடி டவர் : 0.4
250,000 - 400,000 சதுர அடி வரம்பில் உள்ள பல சிறிய IT பூங்காக்கள் நகரமெங்கும் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. அவுட்டர் ரிங் ரோட்டில் 3 ஐடி பூங்காக்களுக்கு ~ 12 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய எஃப்எஸ்ஐ மூலம் பெரிய உயரமான கட்டிடங்கள் வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications