சென்னைக்கு வருது 3 புது ஐடி பார்க்.. அதுவும் எதிர்பார்க்காத இடத்தில்.. இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மென்பொருள் துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக சென்னை வெளிவட்டச் சாலை (ORR) பகுதியில் உள்ள நிலப்பரப்பில் மூன்று புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் புதிதாக ஐடி பார்க்குகள் உருவாக்கப்பட உள்ளன.

டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, மலையம்பாக்கம், மண்ணிவாக்கம் மற்றும் வண்டலூர் ஆகிய மூன்று தளங்களுக்கு ஐடி பார்க் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai to get 3 more massive T Parks for the first time in ORR area

ORR செய்யப்பட்ட ஆய்விற்கு பிறகே இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டன. மலையம்பாக்கம் மார்க்கத்தில் 5.33 ஏக்கர், ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் முதல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இரண்டாவதாக மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் நில மதிப்பு 5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு 8.05 கோடி ரூபாய் ஆகும்.

சென்னை புதிய பூங்கா: இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ஏற்கனவே ஐடி பூங்காக்கள் உள்ள நிலையில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அதன்படி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இது அமைக்க முன்வந்துள்ள சத்வா குழுமம் தனது திட்டத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது. தற்போது 21 தளங்கள் கொண்ட 4 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 டவருக்கு பதில் 4 டவர் அமைக்கப்படும். அதன் பரப்பளவு முன்பு 3.81 லட்சம் சதுர மீட்டரில் இருந்து 5.24 லட்சம் சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.

இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.

இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இன்றுதான் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+