சென்னையில் வருகிறது புதிய ராட்சச பாலம்.. அதுவும் மிக முக்கிய சாலையில்.. இனி ஈஸியா போகலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

Chennai to get a new flyover in the Teynampet to Saidapet road for 3.5 km of distance

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன.

சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பகுதியில் முக்கியமாக நந்தனம் சிக்னல் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஜிஎஸ்டி சாலை: இந்த நிலையில் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சாந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.

இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது.

அந்த பணிகள் முடிந்த நிலையில் வரும் நாட்களில் சாலை விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 15.7 கோடி மதிப்பிலான சொத்துகள் இடிக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+